இதுதான் பிஜேபியின் 'தார்மிகம்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

இதுதான் பிஜேபியின் 'தார்மிகம்'

கோவை, ஜூன் 26 "எழுதக் கூறினார்கள் எழுதினேன்"  என்று விஜய் மகள் குறித்து ஆபாசமாகப் பதிவு செய்த பாஜக பெண் ஆதர வாளர்  விசாரனையில் அம்பலப் படுத்தினார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி. இவர், ட்விட்டர், முக நூல் உள்ளிட்ட சமூகவலைதளங் களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து மோசமான ஆபாசமானப் பதிவு களைப் பதிந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட நடிகர் விஜய் "பெரியார், அம்பேத்கர், காமராஜரைப் படியுங்கள்" என்று பேசினார்.  இப்படி நடிகர் விஜய் பேசியது குறித்து விமர்சனம் என்ற பெயரில் பாஜக பெண் நிர்வாகி விஜய்யின் மகள் குறித்து ஆபாச மாகப் பதிவு செய்தார். அவரை கைதுசெய்து காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரித்தனர்.  விசாரணையில் அவர் தான் சுயமாக எழுதவில்லை என்று கூறி யுள்ளார். 

அவர் விசாரணையில் கூறியதா வது: "நான் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் சுயமாகப் பதிந்தவையல்ல.  இது போன்றவற்றைப் பரப்ப வேண்டும் என்று கூறி எனக்கு அனுப்பியதை மட்டுமே நான் என்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் நடிகர் விஜய்யின் பெண் குழந்தை குறித்து மிகவும் மோசமான வகை யில் கொச்சையாக சமூகவலைதளத் தில் எழுதிய பார்ப்பனப் பெண் ணான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்பவர் காவல்துறை விசாரணையின் போது கூறியதாக மேற்கண்ட செய்தி வெளியாகி உள்ளது

 பாஜக முக்கிய பிரமுகர்களால் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தவறாக வழிநடத்தப் படுகிறார்கள் என்று இதன் மூலம் தெரியவருகிறது, கேரளாவில் பல ஊர் தெருக்களில் "எங்கள் பிள்ளை களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம், ஆகவே பாஜகவினர் இங்கு வரவேண்டாம்" என்று பதாகை வைத்துள்ளனர். அது போல் இனி தமிழ்நாடு எங்கும் வைக்கவேண்டும் இல்லையென் றால் பாஜகவினரும், ஹிந்து அமைப்பினரும் சேர்ந்து நமது இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி விடுவார்கள்

இந்த சூழலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில்  அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, உமா கார்க் கியை  மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து, கோவையில் இருந்து உமா கார்க்கியை அழைத்து வந்த காவல்துறையினர் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


No comments:

Post a Comment