சென்னை, ஜூன் 21- இந்தியாவின் நகர்ப்புற மின் வாகன இயக்கத்தில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்து வதற்காக புதிய நகர்ப்புற பயணிகள் மின்வாகனமான ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி எனும் மூன்று சக்கர மின் வாகனத்தை ஒமேகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டியின் இரண்டு வகைகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக விழாவில் பேசிய ஒமேகா சீக்கி மொபிலிட்டியின் நிறுவனர் தலைவர் உதய் நாரங்:- வாகனப் போக்குவரத்து என்பது வெறும் செயல்திறனைக் கடந்து சுற்றுச்சூழல் பொறுப்புணர்வின் அடையாளமாக மாற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதே எங்கள் நோக்கம். ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டியின் அறிமுகத்துடன், நகர்ப்புற போக்குவரத்தை மறுவரையறை செய்வதற்கான எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தியா முழு வதும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சவால் களுக்கு தவிர்க்கமுடியாத தீர்வை முன்வைக்கிறோம். புதுமை, நீடித்ததன்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, போக்குவரத்து வாகன எல்லைகளை விரிவாக்கவும், புதிய சாத்தியங்களை திறந்து, போக்குவரத்து வாகன முறையை மாற்றவும் நாங்கள் துணிகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment