அய்தராபாத், ஜூன் 7 - தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் ராஜராஜேஷ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று சாமிக்கும்பிட்டுகொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமி. இவர் ராஜனா சிரிசிலா மாவட்டம் விமுலாவாடி பகுதியில் உள்ள ராஜ ராஜேஷ்வர சுவாமி வழிபாட்டு தலத்திற்கு சென்றார். வழிபாட்டு தலத்திற்குள் சென்ற அவர் வரிசையில் நின்று சாமிகும்பிட்டுகொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வழிபாட்டு தலத்தில் வரிசையில் நின்றபோது அப்படியே சுருண்டு விழுந்தார். அவரை மீட்ட மருத்துவக்குழுவினர் லட்சுமியை பரிசோதனை செய்தனர். அதில் லெட்சுமி உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியின் உடல் கூராய்வுக்காக அருகில் உள்ள மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment