நூற்றாண்டு 'இலச்சினை' வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 3 சென்னையில் மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங் கத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்," பாலர் இல்லமாக இருந்த இந்த இடத்தை தலைவர் கலைஞரால் கலைவாணர் அரங்கமாக ஆக்கப் பட்டு, அந்த கலைவாணர் அரங்கத் தில் நடைபெறும் தலைவர் கலை ஞரின் நூற்றாண்டு இலச்சினை, அதாவது லோகோ வெளியீட்டு விழாவிற்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய பெருமதிப் பிற்கும், மரியாதைக்கும் உரிய கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் வருகை தந்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கை வாரிசான தலைவர் கலைஞரை வாழ்த்துவ தற்காக காந்தியாரின் பேரன் இங்கே வருகை தந்திருக்கிறார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக நாங்கள் இருந்தாலும், காந்தியாருக் கும் எங்கள் இயக்கத்துக்குமான தொடர்பை மரியாதைக்குரிய கோபாலகிருஷ்ணன் காந்தி நன்கு அறிவார். தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங் குவதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத் தில் காந்தியாரின் தொண்டராகத் தான் இருந்தார். கதராடை உடுத் தினார். கதர்த் துணிகளோடு நாடு முழுவதும் சுற்றினார். கள்ளுக்கடை மறியல் நடத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். வகுப்புரிமையைக் காக்க தனி இயக்கம் தேவை என்பதால் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங் கினார் தந்தை பெரியார்.
மதவெறியன் கோட்சே-வால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தந்தை பெரியார் அடைந்த வேதனை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. “இருந்த காந்தி, காந்தி! அவர்கள் இறந்த காந்தி, எங்கள் காந்தி!” என்றார். அதே போல் அறிஞர் அண்ணாவும், காந்தி யார்மீது மிகுந்த மதிப்பு வைத் திருந்தார்கள். ‘உலகப் பெரியார் காந்தி’ என்ற தலைப்பில் 1948-ஆம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார் பேரறிஞர் அண்ணா. காந்தியார் கொல்லப்பட்ட போது, "காந்தி யாரின் புகழொளியை அல்ல, அவ ரது உழைத்து அலுத்த உடலைத்தான் வெறியன் சுட்டு வீழ்த்தினான்" - என்று தனது 'திராவிட நாடு' இதழில் எழுதினார். அந்த வரி சையில்தான் கலைஞரும், காந்தி யார்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். நாங்கள் எப்படி காந்தியார்மீது மதிப்பும் மரி யாதையும் வைத்திருக் கிறோமோ, அதைப் போல தந்தை பெரியார் -_ அறிஞர் அண்ணா - _ தலைவர் கலைஞர் _- திராவிட இயக்கம் மீது மதிப்பு கொண்டவர் தான் நம்முடைய கோபாலகிருஷ்ணன்.
நாளை ஜூன் 3-ஆம் நாள்! வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு விடிவெள்ளியாய்த் தோன்றி - வாழும் காலத்தில் ஒளிதரும் உதயசூரியனாக வாழ்ந்து - நிறைந்த பின்பும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண் டிருக்கிற கலைஞர் தோன்றிய நாள். அவரது பிறந்த நாள் என்பதைவிட, தமிழ்ச் சமுதாயத்திற்கு உயிராக - உணர்வாக இருந்தவர் - உதயமான நாள் என்றே சொல்ல வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், அவர்களே தமிழ்நாடு அரசு ஆவார். என் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசையே அவருக்கும் அவரது புகழுக்கும் நான் காணிக்கை ஆக்குகிறேன். இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் தலைவர் கலைஞர் தான். அவர் தொடாத துறையும் இல்லை - தொட்டுத் துலங்காத துறையும் இல்லை என்ற வகையில் அனைத்துத் துறையிலும் முத்திரை பதித்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் போட் டுக் கொடுத்த பாதையில் தான் அனைத்துத் துறைகளும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. பொது நலனும் தொலைநோக்குப் பார்வை யும் கொண்ட அரசாங்கத்தைக் கலைஞர் நடத்தினார். அதனால்தான் அய்ந்து முறை இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விடுதலை இந்தியாவில் நடந்த 13 சட்டமன்றத் தேர்தலில் நின்று - வென்று காட்டிய வெற்றி வீரராக அவர் இருந்ததற்கு இதுதான் காரணம் - மக்களோடு மக்களாக இருந்ததுதான். அவர் மக்களின் மனங்களில் என்றும் ஆட்சி செய்கிறார், இன்றும் வாழ்கிறார் கலைஞர். இலக்கியவாதிகளுக்கு எல்லாம் இலக்கியவாதியாக - கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞராக - அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக - முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராகத் திகழ்ந்த கலைஞர் நற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த இலச்சினையை (லோகோ) வெளியிட்டு இருக்கி றோம்.
கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் மதுரையில் அமைய இருக்கிறது. சென்னையில் அவரது நூற்றாண்டு நினைவு மருத்துவமனை அமைய இருக்கிறது. அரசின் சார் பில் மாதம்தோறும் - மாவட்டம் தோறும் விழாக்களை நடத்த இருக் கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். 3233 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கிறது.
வருகிற ஜனவரி மாதம் சென் னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். தமிழ் நாட்டின் மீதும் திராவிட முன் னேற்றக் கழக அரசு மீதும் அவர்கள் வைத்திருக்கக்கூடிய மதிப்பையும் மரியாதையையும் அப்போது நான் அறிந்து கொண்டேன். தமிழ்நாட் டின் வளர்ச்சியையும் உட்கட்ட மைப்பு வசதிகளையும் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நிறுவனங்கள் அறிந்து வைத்திருக்கிறது. இந்தியா வில் முதலீடு செய்யும் போது நிச்சயமாக தமிழ்நாட்டில் தான் எங்களது நிறுவனங்களைத் தொடங் குவோம் என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். இதற்கெல் லாம் காரணம், தலைவர் கலைஞர் போட்டுக் கொடுத்த அடித்தளம் தான்.
அந்த வகையில் - நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டி அவருக்கு, அவருடைய புகழுக்கு மேலும் மேலும் புகழ் சேர்க்கும் வகையில், ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்பு கிறேன். தலைநகர் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகள வில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான “BEST IN CLASS” Convention Center - ஆக இது அமைய வேண் டும் என்று நான் நினைக்கிறேன்.
உலகளாவிய தொழில் கண்காட் சிகள் - வர்த்தக மாநாடுகள் - தொழில் நுட்பக் கூட்டங்கள் - உலக நிறுவ னங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் - உலகத் திரைப்பட விழாக்கள் - போன்றவை நடக்கும் இடமாகக் ‘கலைஞர் Convention Centre’ அமைய வேண்டும் என எண்ணுகிறேன். இது, சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்! மிகப்பெரிய Convention Centre-கள் உலகின் பல நாடுகளில் இருப்பது போல தமிழ்நாட்டில் - சென்னையில் இருக்கிறது - அதுவும் கலைஞர் பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். Convention Centre போன்ற பயன் பாட்டுச் சின்னங்கள் கலைஞர் புகழை நூற்றாண்டுகள் கடந்தும் - உலகமெங்கும் எடுத்துச் செல்லும்.
ஏற்கெனவே, தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மய்யம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மய்யம் சுமார் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர் காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த ‘கலைஞர் Convention Centre சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய - உலகத் தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் - ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப் படும் என்பதை பெருமையோடும் - மகிழ்ச்சியோடும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கலைஞர் Convention Centre’ என்பது தமிழ்நாட்டு இளைய சக்தியை - அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும். 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலமாகப் பயிற்சி பெற்று வரும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களுடைய, இளைஞர் களுடைய அறிவுக்குடியிருப்பாக ‘கலைஞர் Convention Centre’ அமையு மானால் காலமெல்லாம் கலைஞர் வாழ்வார்! அதுவே நம்மை ஆளாக் கிய தலைவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான, உண்மையான புகழாக இருக்கும்.
கலைஞரின் முகம்தான் நமது இலச்சினை! கலைஞரின் கொள்கை கள்தான் நமது இலட்சியங்கள்! கலைஞரின் கனவுகளை நிறை வேற்று வதுதான் நமது வாழ்நாள் கடமை என்பதைச் சொல்லி கலைஞரின் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும், வாழ்க, வாழ்க, வாழ்க." இவ்வாறு முதல மைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment