ஆவடி, ஜனு. 27- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25.6.2023
ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு எண்3, காந்தி தெரு, ராமலிங்கபுரத்தில் உள்ள பெரியார் மாளிகையில் மாவட்ட ப.க.செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்புரையுடன் ப.க.மாவட்ட தலைவர் தி.ஜானகி ராமன் தலை மையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பார்களாக பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், தலைமை கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட காப்பாளர் பா.தென் னரசு ஆகியோர் கலந்துகொண்டு ப.க.வின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறித்து விளக்க உரையாற்றினர்.
நிகழ்வில் ப.க.துணைதலை வர் வேப்பம்பட்டு சிவ.ரவிச் சந்திரன், மாவட்ட கழகத் தலை வர் வெ.கார்வேந்தன், செயலா ளர் க.இளவரசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், துணை தலைவர் மு.ரகு பதி, துணை செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன், ஆவடி நகர தலைவர் முருகன், துணை தலை வர் வஜ்ரவேல், ப.க.தோழர்கள் எஸ்.ஜெயராமன், கே.சுந்தர் ராஜன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, திருமுல்லைவாயில் பகுதிதலைவர் இரணியன்( எ) அருள்தாஸ், வை.கலையரசன், திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன் பகுத்தறிவு பாசறை இரா. கோபால், பழ.முத்துக்குமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் திராவிடர் கழகமும் இணைந்து பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துவது, ஆவடி யில் உள்ள பெரியார் சிலையை புதுப்பித்தல், தெருமுனை பிரச் சார கூட்டங்கள் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவி ரப்படுத்துதல் தீர்மானங்களுடன் பகுத்தறிவாளர் கழக பணியை தீவிரப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகளாக தி.ஜானகிராமன் தலைவர், க.கார்த்திக்கேயன் செயலாளர், துணை தலைவர் ஜெயராமன், துணை செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோரை ப.க.மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் அறிவித்தார்.இறுதியில் புதிதாக நியமிக்கப் பட்ட ப.க.செயலாளர் கார்த்திக் கேயன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
No comments:
Post a Comment