மேட்டூர் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றிய கழக தலைவர் கோ சோமசுந்தரத்தின் தாயாரும், தருமபுரி மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜியின் தாய்வழி பாட்டியுமான கோ.சின்ன பாப்பா (வயது 90) மறைவுற்றார்.
அவரது உடலுக்கு கழக காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் தலைமையில் தலைமைக் கழக அமைப் பாளர் கா.நா.பாலு முன்னிலையில் மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ,சவுந்த ரராஜன் மேச்சேரி ஒன்றிய தலைவர் வெள்ளார் ராஜேந்திரன், மேட்டூர் ஆர்.எஸ்.பகுதி உதய பாஸ்கர், இளைஞரணி செயலாளர் சீனிவாசன், ஆர்.எஸ்.பகுதி கழக பொறுப்பாளர் ஜெயக்குமார், மேட்டூர் நாகராஜ், மேட்டூர் கலை படிப்பகச் பொறுப்பாளர் குமார், அ.சக்திவேல் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சுகுமார், ஆர்.எஸ்.பகுதி ராஜேந்திரன், முத்துக் குமார், முத்துராசு, கிட்டு, தர்மன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் அம்மையார் உடலுக்கு வீரவணக்கம் செலுத் தினர்,
No comments:
Post a Comment