கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும், நகரச் செயலாளர், அவைத் தலை வராக 40 ஆண்டுகள் பணி புரிந்தவரும், நேருவுக்கு கருப்புக்கொடி, மும்முனைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் ஆகிய இப்போராட்டங்களில் பங்கேற்று கடுங்காவல் சிறை தண்டனை பெற்றவர்.
தந்தை பெரியாரின் சீடராக - பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக - தலைவர் கலைஞரின் உற்ற உடன்பிறப்பாக விளங்கியவர்.
தலைவர் கலைஞர் அவர்களின் கரத்தால் மிதிவண்டி பரிசு பெற்று, "அடிமட்டத் தொண்டனை கழகம் மதிக்கத் தவறாது" என தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.
பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவருமான, கடலூர் கி.கோவிந்தராசன் (மறைவு: 10.6.1998) அவர்களை நினைவு கூர்கிறோம்.
கி.கோவிந்தராசன் குடும்பத்தினர், கி.தண்டபாணி குடும்பத்தினர், கி.வீரமணி - மோகனா குடும்பத்தினர்.
குறிப்பு: இவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மூத்த அண்ணன் ஆவார்.
No comments:
Post a Comment