வேலூர் மாவட்டம் மதுமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (47). மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு வென்மதி, மதுமதி ஆகிய பெண் குழந்தை கள் உள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி மாலை லாரி மேல் ஏறி பிரபாகரன் மாங்காய் பறிக்கும் போது கால் தடுமாறி கீழே விழுந் துள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சென்னை ராய புரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் 6.6.2023 அன்று இரவு 9.33 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். பிரபாகரனின் உடல் உறுப் புகளை கொடையளிக்க விரும்புவதாக உறவினர்கள் தெரிவித் தனர்.
இதையடுத்து, அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகம், 2 கண்கள் மற்றும் தோல் ஆகியவை எடுக்கப்பட்டு தேவையான 5 நோயாளி களுக்கு பொருத் தப்பட்டன.
No comments:
Post a Comment