சிறீநகர், ஜூன் 22 - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், காஷ்மீரில் 5 ஆண்டு ஒன்றிய ஆட்சி நிறைவு செய்யப்பட்டிருப்பது குறித்து மாநில கட்சிகள் வேதனை தெரிவித் துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014இல் நடந்த சட்டப்பேரவை தேர் தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காததால், பாஜ ஆதரவுடன் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப் பேற்றார்.
பின்னர் பாஜ தனது ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மெகபூபா முதல மைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதனால், ஒன்றிய ஆட்சி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் மாநிலம் இருந்தது. கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய 370ஆவது சட்டப் பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்தது. அதோடு அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், காஷ்மீரில் 5 ஆண்டு ஒன்றிய ஆட்சி 19.6.2023 அன்று நிறைவ டைந்தது. இது குறித்து தேசிய மாநாட்டு துணைத் தலைவர் உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய். இத்தகைய வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியில் ஒன்றிய ஆட்சியின் கீழ் காஷ்மீர் 5ஆம் ஆண்டை நிறைவு செய்திருக் கிறது.
ஜம்மு _- காஷ்மீர் தொடங்கும் இடத் தில் இந்தியாவின் ஜனநாயகம் முடிவடைகிறது’’ என கூறி உள்ளார். ‘‘ஜனநாயகத்தின் தாய் என தன்னை அழைத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த தேசமும் அதன் தலை மையும் வெட்கித் தலைகுனிய வேண்டும்’’ என பிடிபி கட்சி செய்தி தொடர் பாளர் மோகித் பான் கூறி உள்ளார்.
விரைவில் காஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை நடத்த வேண்டுமென பாஜ உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment