அய்தராபாத், ஜூன் 1 தெலங்கானாவில் பார்ப்பன சமுதாய மாணவர் களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஹன் பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி செலவில் பார்ப்பன நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் நேற்று (31.5.2023) திறந்து வைத்து பேசியதாவது:
நாட்டிலேயே முதன்முதலில் இங்கு தான் பார்ப்பன சமுதாயத் துக்கான நலக்கூடம் திறக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களில் ஏழை களும் உள்ளனர். இதனால் பார்ப்பனர் நலத் திட்டத் துக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. தெலங்கானாவில் தீப, தூப, நைவேத் திய திட்டம் மேலும் 2,696 கோயில்களுக்கு நீட்டிக்கப்படும். இக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். வேத பண்டிதர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் கவுரவ நிதி ரூ.2,500-இல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். இந்த உதவியை பெறுவதற்கான வயது வரம்பு 75-ல் இருந்து 65 ஆக குறைக் கப்படும். வேத பாடசாலை நடத்த ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அய்அய்டி, அய்அய்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் படிக்கும் பார்ப்பன மாணவ, மாணவி களுக்கான கல்விக் கட்டணத்தை இனி அரசே ஏற்கும். பரம்பரை அர்ச்சகர்களின் பிரச்சி னைகள் குறித்து, வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப் படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment