“அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே?” நூலை தமிழர் தலைவர் பெற்றுக்கொண்டார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

“அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே?” நூலை தமிழர் தலைவர் பெற்றுக்கொண்டார்!

நேற்று (07.06.2023) சென்னை, புளியந்தோப்பு, பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உரைகளின் தொகுப்பான “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே ?” என்ற நூலினை நீர்வளத் துறை அமைச்சரும்,தி.மு.க.பொதுச் செயலாளருமான  துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். உடன் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, தி.மு.க.  முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமானதி.வேல்முருகன், தி.மு.க. நிர்வாகிகள். 


No comments:

Post a Comment