தஞ்சையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்துவது - புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்து புதிய கிளைகளை உருவாக்குவது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

தஞ்சையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்துவது - புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்து புதிய கிளைகளை உருவாக்குவது!

தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!

தஞ்சை, ஜூன் 5 கடந்த 2.6.2023 அன்று மாலை 6.30 மணி யளவில் தஞ்சாவூர், கீழராஜ வீதி, பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கழக காப்பாளர் மு. அய்யனார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் வரவேற்று உரையாற்றினார். தொடக்கத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார்.

தலைமை கழக அமைப்பாளர் க.குருசாமி இக்கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். 

திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், உரத்தநாடு தெற்கு பகுதி செயலாளர் சுடர் வேந்தன், தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு செ. தமிழ்செல்வம், உரத்தநாடு நகர துணை செயலாளர் கா.மாரிமுத்து, உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெ. புகழேந்தி, பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா சரவண குமார், சாலியமங்கலம் நகரத் தலைவர் துரை. அண்ணாதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் கண்ணன், பெரியார் சமூக காப்பணி இயக்குநர் பொய்யாமொழி, நகர திராவிட கழக தோழர் இரா வீரக்குமார், நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் இலக்குமணசாமி, மகளிரணி தோழர் கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா வெற்றிக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கோபு பழனிவேல், முன்னிலை ஏற்றிருந்த மாவட்ட செயலாளர் அருணகிரி, காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்வில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங் தலைமை உரையாற்றினார். இறுதியாக தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் நன்றி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண்: 1

கழகத் தோழர் தெற்கு நத்தம் க சசிகுமார், திருக் கனத்தம் சசிகுமார் அவர்களின் தாயார் சிறீரங்கம், சாலியமங்கலம் ராஜேந்திரனின் தாயார் சாவித்திரியம்மாள், மாவட்ட வழக் குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் முத்தப்பா, சட் டையை அரிப்பு போராட்ட வீரர் முத்துவீரன்கண்டியன்பட்டி பழனிவேல், கழகத் தோழர் எலந்தவெட்டி கந்தசாமியின் தாயார் நல்லம்மாள், நீடாமங்கலம் நகரத் தலைவர் 

பி.எஸ். ஆர்.அமிர்தராஜ், உள்ளிக்கோட்டை முத்துக்குமார சாமி, பட்டுக்கோட்டை சின்னக்கண்ணு, வல்லம் நகர தலை வர் அழகிரியின் மாமியார் இரா.ராமாமிர்தம், ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2

மே 13 ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3

ஜூன் 10 அன்று தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் நடை பெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. பயிற்சிப் பட்டறையில் குறைந்தது 100 இளைஞர்கள் மாணவர்களை பாலின வேறுபாடு இன்றி பங்கேற்கச் செய்திட அனைத்து பொறுப்பாளர்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

வைக்கம் போராட்ட நூற்றாண்டு திராவிட மாடல் விளக்க தெருமுனை கூட்டங்களை சிறப்பாக நடத்திய தஞ்சை மாவட்ட அனைத்து ஒன்றிய மற்றும் கழக பொறுப்பாளர்களை இக்கூட்டம் பாராட்டுகிறது, மேலும் தொடர்ந்து அனைத்து ஒன்றியங்களிலும் கிராமங்கள் தோறும் தெருமுனை கூட்டங் களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்: 5

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் முடிவடைந்த விடுதலை சந்தாக்களை புதுப்பிப்பது மற்றும் புதிய விடுதலை சந்தாக்களை சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்: 6

தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை முருகராஜ் நகரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொது நலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் 16ஆம் ஆண்டு விழாவினை ஜூன் 13ஆம் தேதி மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்: 7

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் இணைத்து புதிய கிளைகளை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்: 8

ஜூன் 28, 29, 30 ஜூலை ஒன்றாம் தேதி ஆகிய நான்கு நாள்கள் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் புதிய இளைஞர்கள் மாணவர்களை தேர்வு செய்து பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர்: க.மாரிமுத்து

தஞ்சை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர்: ஆசிரியர் மா.இலக்குமணசாமி

தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் 

இரா.வீரக்குமார்.

உரத்தநாடு நகர துணைச் செயலாளர்: இரா. இராவணன்.

தஞ்சை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆட்டோ செந்தில், உரத்தாநாடு இரா.ராவணன், பாலகிருஷ்ணன், சாலிய மங்கலம் ஒன்றிய அமைப்பாளர் வை.இராசேந்திரன், மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment