இந்தியாவிலேயே மூன்றாவது பெரியது அண்ணா மேம்பாலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

இந்தியாவிலேயே மூன்றாவது பெரியது அண்ணா மேம்பாலம்

1969இல் கலைஞர் அவர்கள் முதல மைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின் திட்டமிட்டு வடிவமைத்துக் கட்டப் பட்ட மிகப் பெரிய மேம்பாலம் அண்ணா மேம்பாலம்: 1970 வாக்கில் அப்போது சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, கதிட்ரல் சாலை, அண்ணாசாலை தேனாம்பேட்டை சாலை ஆகிய நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த நெரிசலை நீக்கி அப் பகுதியில் சுகமான சாலைப் போக்கு வரத்தை உறுதிப்பசேறும் வகையில் கூடப்பட்டு 1.7.1973 அன்று முதல மைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இப்பாலம்.

பொதுவாக ஆறுகள். தாழ்வான பகுதிகள், இரயில் தண்டவாளங்கள் போன்ற பகுதிகளைக் கடப்பதற்குத் தான் மேம்பாலங்கள் கட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டும் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது.

ஜெமினி ஸ்டூடியோ அப்பகுயில் அமைந்திருந்ததால் அப்பாலத்தைக் குறிப்பிடும்போது “ஜெமினி மேம் பாலம்” எனக் கூறப்பட்டது. கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர் களைப் போற்றும் நெறிகளில் ஒன்றாக. அன்றைய நிலையில் இந்தியாவி லேயே மூன்றாவது பெரிய மேம்பால மாகத் தாம் கட்டிய இப்பாலத்திற்கு “அண்ணா மேம்பாலம்“ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

சென்னை மாநகருக்கு வருகை தரும் எவரும், சென்னை மாநகர மக்களில் எவரும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்லும் போது எந்தவித நெரிசலும் இல்லாமலும் சீராக - சுகமாக பயணம் செய்து இன்புறுவதை இன்றும் நம்மால் காண முடியும்.


No comments:

Post a Comment