இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு,
பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.
டால்மியாபுரம் “கல்லக்குடி” என மாற்றப்பட்டது
மெட்ராஸ் - சென்னை என மாற்றப்பட்டது.
பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கென இரவலர் இல்லங்கள் அமைத்தார்.
கண் பார்வையற்றோர்க்குக் கண்ணொளி வழங்கும் திட்டம்
கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா.
குடிசை மாற்று வாரியம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
வள்ளுவர் கோட்டம் அமைக்கப் பட்டது.
குமரி முனையில் வானுயர்ந்த வள்ளுவர் சிலை 133 அடியில்,
பொங்கல் திருநாளுக்கு மறுநாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்தல்.
குறளோவியம் தீட்டினார்.
திருக்குறள் உரை.
பூம்புகார் அமைத்தார்.
உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,
அவசர-கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்.
மகளிர் சுய உதவிக்குழு,
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்,
அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
மெட்ரோ இரயில் திட்டம்,
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம்,
விவசாயக் கடன் அறவே தள்ளுபடி
கிலோ அரிசி 1 ரூபாய்,
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்பு
- என நாளொரு திட்டம் தந்தவர். தலைவர் கலைஞர்
கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையிலும் ஆளுங்கட்சி வரிசையிலும் மாறி மாறி அமர்ந்து அலங்கரித்தபோதும். தன் சிந்தனையால் செயல் திறத்தால், சட்டமன்ற வரலாற்றில் தனித்துவமான முறையில் பிரச்சினைகளை முன்வைப்பதும், ஆளுங்கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைக்கு முன்பாகவே, அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதும் தலைவர் கலைஞர் அவர்களின் வழக்கமாக இருந்து வந்தது.
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் தனது ஆட்சிக்காலத்தில் செயல்வடிவம் கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள். அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் 1989இல் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் சட்டத்தையும் நிறைவேற்றினார்.
இந்த நூற்றாண்டில் சரித்திரம் கண்டிராத வகையில். கடின உழைப்பால் ஓய்வறியாமல் உறங்காமல் ஆற்றிய பணிகளால், ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியல் எனும் காலச்சக்கரம் தலைவர் கலைஞர் அவர்களைச் சுற்றியே சுழன்றது. அவர் சுழற்றியபடியே உருண்டது. இன்றைக்கும். எந்தவொரு பிரச்சினையிலும் தலைவர் கலைஞர் அவர்களின் கருத்தென்ன என்று நாடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அவரது உழைப்பால் பயன்பெறாத மனிதர் தமிழ்நாட்டில் இல்லை என்றே சொல்லலாம். அவர் தொடாத துறையும் இல்லை; தொட்டு வெற்றி பெறாத துறையும் இல்லை.
“பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜ தந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதன் மூலம் தமிழகத்திற்குப் புதுவாழ்வு தருபவர் ஆகிறார், நமது கலைஞர். அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர் பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்” - என்று தந்தை பெரியார் அவர்களின் வாழ்த்துக்கு ஒப்ப வாழ்ந்து கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞர், வாழ்க தலைவர் கலைஞர்! வளமாகட்டும் தமிழ்நாடு!
No comments:
Post a Comment