- மணியோசை -
1.மதச்சார்பின்மையும்-உயர்ஜாதி வைதீகப் பிடிப்பும்!
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் (காயஸ்தா என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியர்) ஜனவரி 26 - குடியரசு நாள் என்று பிரதமர் நேரு - அம்பேத்கர் ஆகியோர் முடிவு செய்த நிலையில், ‘‘ஜோதிடர்களால் அசுவ நாள் என்று கருதப்படுவதால், அதை மாற்றிடவேண்டும்'' என்று பிரதமரிடம் கடிதம்மூலம் வற்புறுத்தினார்.
அத்துடன் 1947 ஆகஸ்ட் 14 கூட சுபயோக சுபதினம் அல்ல; inauspicious day என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்; (அதையும் பொருட்படுத்தி 14-க்குப் பதில் 15 மாற்றப்பட்டது) சிலரைத் திருப்திப்படுத்த நள்ளிரவு 12 மணி - 15 ஆம் தேதி ஆகிவிடும் அந்த நிலையில், ஜனவரி 26 பற்றியும் இப்படி எழுதினார்கள்.
பிரதமர் நேரு, ‘‘ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதுமாதிரி தேசிய நாள் குறிக்கும்போது ஜோதிடர் கருத்தைக் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மாற்றவேண்டிய அவசியம் இல்லை'' என்று உறுதியாக மறுத்துவிட்டார்! ‘‘ஜோதிடர்களின் தலையீட்டை நான் ஏற்க முடியாது'' என்று மறுத்துக் கடிதம் எழுதிவிட்டார்.
ஜவகர்லால் நேருவை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். வெறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்; அவர் ஒரு விஞ்ஞான மனப்பான்மை கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர் என்பதால்தான்!
(தொடரும்)
No comments:
Post a Comment