தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன' என்று 'இந்தியா டுடே'- வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி ஒரு கட்டுரை எழுதினார்.
கட்டுரையை படித்த தி.மு.க. தலைவர் கலைஞர், உடனடியாக "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் கூற, வேதனையில் மூழ்கினார் ஆசிரியர் வாஸந்தி.
அவர் தனக்குத் தெரிந்த தி.மு.க. தலைவர் களை யெல்லாம் அழைத்து, 'கலைஞர் இப்படி பேசி விட்டார்' என்று அதிகம் வருத்தப் பட்டார். இதனை அடுத்து மூத்த தி.மு.க. தலைவர்கள் கலைஞரிடம் வாஸந்தியின் வருத்தத்தை தெரிவித்தனர். அதற்கு கலைஞர் "என்னய்யா... தேவதாசி முறை வேணுமாம். ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று கூறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உண்மையை உணர்ந்த வாஸந்தி அதன் பிறகு தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து 'விட்டு விடுதலையாகி' என்ற நாவலை எழுதினார் - அதற்காக உடனடியாக அழைத்துப் பாராட்டினார் கலைஞர்.
அவர் கண்டித்ததால் புதினம் வந்தது. அதற்கு பாராட்டும் தெரிவித்தவர் கலைஞர்.
No comments:
Post a Comment