பெங்களூரு உள்ளிட்ட கருநாடகா மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் கைகோர்ப்போம்அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

பெங்களூரு உள்ளிட்ட கருநாடகா மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் கைகோர்ப்போம்அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு, ஜூன் 6- பெங்களூரு உள்ளிட்ட கருநாட காவில் பெருநகர வளர்ச்சி தொடர்பாக  அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கரு நாடகா தலைமைச்செயலகமான விதான சவுதாவில் நடைபெற்றது.

இதில் பெங்களூருவை சேர்ந்த அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, ஜமீர்அகமதுகான், நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.கே.சுரேஷ், பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா,சட்டமன்ற உறுப்பினர்கள்,மேலவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவரும் தங்களின் ஆலோசனைகளை கூறினர்.

இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- தேர்தல் அரசியல் முடிந்துவிட்டது. நமக்கு அரசியல் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் எதுவாக இருந் தாலும் சரி, அதை நாம் ஓரத்தில் வைத்துவிடலாம். நீங்கள் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேனாள் பிரதமர் வாஜ்பாய், பெங்களூரு நகரின் பெருமை குறித்து பேசினார். தற்போதைய பிரதமரும் அதுபற்றி கூறி யுள்ளார். அதனால் நாம் அனைவரும் சேர்ந்து பெங்க ளூருவை வளர்ச்சி அடைய செய்து அதன் மூலம் நகருக்கு மேலும் பெருமை சேர்ப்போம்.  நாம் அரசியலை விட்டு வளர்ச்சியை ஏற்படுத்தலாம். நீங்கள் (பா.ஜனதா) அரசியல் செய்வதாக இருந்தாலும், நானும் அரசியல் செய்ய தயராக உள்ளேன். அன்புக்கு அன்பு கொடுப்பேன். மோதல் வந்தால் அதையும் எதிர்கொள்ளத் தயார். எனக்கு விரோத அரசியல் தேவை இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

பெங்களூரு நகர மக்கள் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் கஷ்டப்படுகிறார்கள். ஊழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை ஆகும். பெங்களூருவில் எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு நீர் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூருவின் பங்கு முக்கியமானது. கருநாடகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வரிகள் செல் கின்றன. அங்கிருந்து கருநாடகத்தின் பங்கை பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். பெங்களூருவின் வளர்ச்சியில் அதிகாரிகளின் பங்கும் முக்கியமானது. இதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டாலோ அல்லது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தாலோ அதை சகித்துக்கொள்ள மாட்டேன். அத்தகைய அதிகாரி கள் இடத்தை காலி செய்துவிட்டு செல்லலாம். உங்களின் தனிப்பட்ட நலனை ஒதுக்கி வையுங்கள். நல்ல எதிர்காலத் திற்காக நேர்மையான முறையில் சிந்தித்து செயல் படலாம். இதன் மூலம் பெங்களூருவை நாம் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

No comments:

Post a Comment