புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றமாம்-தமிழ் விருப்பப் பாடமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றமாம்-தமிழ் விருப்பப் பாடமா?

புதுச்சேரி, ஜூன் 4 - சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசுப் பள்ளி கள் மாறுகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கா லில் தமிழ் விருப்பப் பாடம் தான். எனினும், கருநாடகத்தில் கன் னடம் கட்டாயப் பாட மாக உள்ளது போல் தமிழை கட்டாயப் பாடமாக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சி வாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிர தேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லா ததால் புதுவை, காரைக்கால் மண்டலங்களில் தமிழ்நாடு பாடத் திட்டமும், ஏனாமில் ஆந் திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத் திட்டமும் பின்பற்றப் பட்டு வருகிறது.

2011இல் என்.ஆர்.காங்கி ரஸ் அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-2015 ஆம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன் றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல் படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி யிலும் அது தொடர்ந்து, 2018-2019 வரையில் 5ஆம் வகுப் புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, சிபிஎஸ்இ பாடத் திட் டத்தை 6ஆம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையில் அறிவித் தார்.

இதன்படி தற்போது வரவுள்ள கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை களில் புதுவை கல்வித் துறை இறங்கியுள்ளது. ஒட்டு மொத்த மாக 127 அரசுப் பள்ளிகளுக்கும் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட் டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது, 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி யுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

ஏற்கெனவே தமிழ்நாடு பாடத் திட்டத்தில் 11ஆம் வகுப்பில் 6 பாடங் களைப் பயின்று வந்தனர். நான்கு முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாஹேயில் மலையாளமும் படித்தனர்.

தற்போது சிபிஎஸ்இ முறையின்படி 11ஆம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப் பத்தில் தமிழ் கட்டாயப் பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற் றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா இதுபற்றி கூறுகையில், 

"தமிழை கட்டாயப் பாடமாக அரசுப் பள்ளிகளில் அறிவிக்க வேண் டும். தமிழை, தமிழர் பண்பாட்டை புகழ் வதுபோல பாசாங்கு செய்து கொண்டு, அதை அழிக்க நினைக்கும் பாதக செயலை அனுமதிக்க முடியாது" என்றார்.

இதுபற்றி கல்வியமைச்சர் நமச் சிவாயத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசுப் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுமதி கோரினோம். ஒன்றிய அரசும் விதிமுறைகளை தளர்த்தித் தான் 127 பள்ளிகளுக்கு அனு மதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக் காலில் தமிழ் விருப்பப் பாடம் தான். கருநாடகத்தில் கன்னட மொழி கட் டாயப் பாடமாக உள்ளதுபோல தமி ழையும் கட்டாயப் பாடமாக்க நட வடிக்கை எடுப்பது தொடர்பாக முதல மைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் சிபி எஸ்இக்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழ்நாடு பாடத் திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம். நீட், ஜேஇஇ போட்டித்தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை கொண்டு வந்தா லும் சங்கடம் வரத்தான் செய் யும். அதை சரி செய்ய ஆசிரியர் களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment