அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது

சென்னை, ஜூன் 21 - சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணி   சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையி னர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரை கைது செய்தனர்.

அவரை அமலாக்கத்துறையினர் காரில் ஏற்றி சென்றபோது அவர் நெஞ்சுவலியால் துடித்தார். உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப் பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோத னையில் அவரது ரத்தக்குழாய்க ளில் 3 அடைப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித் தனர்.

அதைத்தொடர்ந்து உயர் சிகிச் சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று கடந்த 15-ஆம் தேதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். அங்கு இருதயநோய் சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்த மருத்து வர்கள் குழு செந்தில் பாலாஜிக் கான அறுவை சிகிச்சை மேற்கொள் வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்தது.

இந்நிலையில் அமைச்சர் செந் தில்பாலாஜிக்கு காவேரி மருத்து வமனையில் இன்று (21.6.2023) இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்தனர். மருத்துவ மனையின் 7ஆவது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறை யில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இரண்டு முதல் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

முன்னதாக அறுவை சிகிச் சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மயக்கவியல் துறை மூத்த மருத்து வர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர். 

அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள் ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப் பார் என கூறப்படுகிறது.

செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது முன் னிட்டு, சென்னை, காவிரி மருத்துவமனையில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment