சென்னை, ஜூன் 7 ஒடிசா மாநிலம் பாலசோரில் ஜூன் 2ஆ-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும், உரிமங் களை விரைந்து வழங்கவும் எல்அய்சி நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள எல்அய்சி தலைவர் சித்தார்த் மொஹந்தி, அவர்களின் குடும் பத்தினரின் துயரில் பங்கேற்ப தாகத் தெரிவித்துள்ளார்.
இறப்பு சான்றிதழ்
எல்அய்சி பாலிசிதாரர்களுக் கும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா திட்ட பயனாளி களுக்கும் உரிமை தொகை கோருவதில் பல்வேறு தளர்வுகளை எல்அய்சி தலைவர் அறிவித்துள்ளார். இறப்புச் சான் றிதழுக்குப் பதிலாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள, விபத் தில் உயிரிழந்தவர்களின் விவரம், காவல் துறை அல்லதுஒன்றிய மற்றும் மாநில அரசுகள்அறிவித்துள்ள உயிரிழந்தவர் களின் விவரங்கள் இறப்புச் சான்றிதழாகக் கருதப்படும். கோட்ட அளவிலும், கிளைஅளவிலும் உரிமை கோருபவர்களுக்கு உதவ வும், உரிமை தொகை தொடர்பாக விசாரிக்கவும், மய்யங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
துரித சேவை
உரிமை கோருபவர்களுக்கு உதவ மற்றும் பாதிக்கப்பட்டவர் களின் உரிமங்களை விரைந்து பட்டுவாடா செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும். உரிமைதாரர்கள் மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கிளை/கோட்ட வாடிக்கை யாளர் சேவை மய்யங்களை அணுகலாம்.
உரிமம் கோருபவர்கள் 022- 68276827 என்ற எண்ணிலும் அழைப்பு மய்யத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு எல்அய்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment