திருவனந்தபுரம், ஜூன் 11- இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோ போன் உள்ளிட்ட தனியார் நிறுவ னங்களும், ஒன்றிய அரசின் பிஎஸ் என்எல் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் நாட் டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் தடையில்லா இணைய சேவைகளை பெற்று வருகின்றனர்.
ஆனால் நாட்டில் 80 கோடிக் கும் அதிகமான மக்கள் தினமும் இணைய சேவைகளை பெற்று வருவதாகவும், 20 கோடிக்கும் மேலான மக்களுக்கு தற்போது வரை இன்டர்நெட் சேவைகள் சரிவர சென்றடையவில்லை என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதற்கு டெலிகாம் நிறுவனங் கள் நிர்ணயித்துள்ள விலையும் முக்கிய காரணமாக விளங்குகிறது. நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கும் இணைய சேவை சென்றடைவதை உறுதி செய்ய ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாட்டி லேயே முதல் முறையாக கேரள அரசு “கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்“ திட்டத்தை கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்“ என்பது கேரளா அரசின் மலிவு விலை இணைய சேவை வழங்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள 20 லட்சம் ஏழை குடும்பங் களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவை வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு டெலிகாம் நிறுவ னங்களை விட குறைவான விலையில் அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட் டுள்ளது” என்று அவர் கூறினார். தற்போது வரை 17,412 அரசு அலுவலகங்களுக்கும் 9000 வீடுகளுக்கும் கேரளா அரசின் இந்த மலிவு விலை இணைய சேவை வழங்கப்பட்டுள்ள தாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment