பெண் காவலரின் துணிவுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

பெண் காவலரின் துணிவுக்கு பாராட்டு

மெரினாவில் காதலர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை, தைரியமாக எதிர் கொண்டு அவர்களை கைது செய்ய உதவிய பெண் ஆயுதப் படை காவலர் கலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரு கின்றன.

காதலர்களிடம் அத்துமீறிய தோடு, வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை பெண் ஆயதப்படை காவலர் கலா என் பவரின் உதவியுடன் சென்னை காவலர்கள் கைது செய்தனர். முன்னதாக, இந்த காவலர் கலா போதையில் வழிப்பறியில் ஈடு பட்ட ரவுடிகளை தைரியமாக விரட்டியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

சென்னை மெரினா கடற் கரையில் குறிப்பாக, பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு எதிராக உள்ள பகுதியில் 4.6.2023 அன்று மாலை பொதுமக்கள் அதிகம் வந்த வண்ணம் இருந் துள்ளனர். அப்போது காதலர்கள் இரு சக்கர வாகனத்தில் கடற் கரைக்குள் வந்துள்ளனர். 

காதலர்களின் இருசக்கர வாகனத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் இடித்து தகராறில் ஈடுபட் டுள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு, அவர் களை தாக்கி அலைபேசியையும் பறித்துள்ளனர். இவ்வாறு அலை பேசியை பறித்துக்கொண்டு தகராறில் ஈடுபட்ட நபர்களை அப்பகுதியில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் கலா என்பவர் தனி ஒரு வராக தடுத்து நிறுத்த முயன் றுள்ளார். காவலர் கலா விசாரிக்க முயன்ற போது, போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இவ்வாறு தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து விசாரிக்க வந்த காவலர் கலாவையும் தகாத வார்த்தையில் பேசி தாக்கவும் முயற்சித்துள்ளனர். தனியாக நின்று போதையில் தகராறில் ஈடு பட்டவர்களை தடுக்க முயன்ற காவலர் கலா அருகில் இருக்கும் அண்ணா சதுக்கம் காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் இரு சக்கர வாகனத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் காவலர் கலாவிடம் சிக்காமல் தப் பித்து சென்றுள்ளனர். போதை ஆசாமிகளின் இருசக்கர வாக னத்தில் பதிவு எண்ணைப் பார்த்து வைத்திருந்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் இணையரை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.  காவலர் கலா மற்றும் காதல் இணையர் கூறியதை அடிப் படையாக வைத்து அண்ணா சதுக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும் விசா ரணை மேற்கொண்டதில் போதையில் தகராறில் ஈடுபட்டு அலைபேசியை பறித்துச் சென்ற வர்கள் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான வால் டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், தமிழரசன், வசந்தகுமார், சோம சுந்தரம் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை அண்ணா சதுக்கம் காவலர்கள் இந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.  குறிப்பாக, உதயகுமார் பி பிரிவு ரவுடி என்பதும், அவர் மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசா ரணையில் தெரியவந்துள்ளது. 

இதேபோன்று, தமிழரசன் மீது ஏழு வழக்குகளும் வசந்தகுமார் என்பவர் மீது அய்ந்து வழக்குகளும் விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

போதையில் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் தாறுமாறாக ஓட்டி இவ்வாறு பொதுமக்களிடம் தகராறில் ஈடு படுவதை உதயகுமார் வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பல்வேறு வழக்குகள் நிலுவை யில் உள்ள ரவுடிகள் காதல் இணையரை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும்போது, மாலை வேளை யில் நூற்றுக்கணக்கானோர் சுற்றியிருந்தாலும் ரவுடிகளை தனி ஒருவராக, எதிர்த்து போராடிய காவலர் கலாவிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. இருந்தபோதிலும் அவர் தைரிய மாக நின்று தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டு தனது கடமையை செய்த காவலர் கலாவுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment