"கொடி - செடி - படி" எனும் முழக்கத்தை முன் வைத்த தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

"கொடி - செடி - படி" எனும் முழக்கத்தை முன் வைத்த தமிழர் தலைவர்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 20 உளுந்தூர்பேட்டையில் ஜூன் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தோழர்கள் வீடுகளில் கொடி ஏற்ற வேண்டும். கொடி கம்பத்துக்கு அருகில் ஒரு செடி நட வேண்டும் எனவும் . படி என்றால் விடுதலை நாளிதழ்  படிக்க வேண்டும் எனவும் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் விழுப்புரம் சுப்பராயன் மற்றும் பல்வேறு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

நிகழ்ச்சி அரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை அனைத்து தோழர்களும் இரண்டு வரிசையாக நின்று கழக கொள்கை முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.  நிகழ்ச்சியையொட்டி நீண்ட தூரம் கழகக் கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டிருந்தது. 

கல்லக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஜூன் 18ஆம் தேதி உளுந்தூர்பேட்டை ஆதிலட்சுமி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசுகையில்,

கொடி, செடி, படி எனும் முழக்கத்தை தோழர் களுக்கு தமிழ் தலைவர் அவர்கள் வழங்கினார்கள் அதாவது,  கழகத் தோழர்கள் வீட்டில் கொடி பறக்க வேண்டும், கொடிக்கு அருகில் ஒரு செடி நட வேண்டும். செடி நட்டால் அது சுற்றுச்சூழலை பாதுகாக்கும். தோழர்கள் விடுதலை நாளிதழை படிக்க வேண்டும் விடுதலையைப் படித்தால்  சமூக மாற்றம் ஏற்படும் என்றார்.  மேலும், மேற்கண்ட பத்து மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங் களை பார்க்கின்ற போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும், என்னுடைய சொந்த மாவட்டம் என்பதில் பெருமையாக உள்ளது என்று கூறி கழகத் தோழர்களிடையே உற்சாகமாக கருத்துரை வழங்கினார்.

நிகழ்வின் தொடக்கத்தில்,  கழக சொற்பொழிவாளர் புவனகிரி யாழ் திலீபன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை யாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா ஜெயக்குமார், குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்ட தலைவர் ப. சுப்புராயன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர. அன்பழகன், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி. இளங்கோவன், கடலூர் மாவட்டத் தலைவர் சோ. தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் 

சி. தங்கராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், காரைக்கால் மாவட்டத் தலைவர் குரு. கிருட்டின மூர்த்தி ஆகியோர் மாவட்டக் கழக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்: 

ஈரோட்டில் மே 13 ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

பெரியாரியல் பயிற்சி முகாம்: 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜூன் 24, விருத்தாசலம் கழக மாவட்டம் ஆவட்டி கல்லூரில் ஜூன் 25, விழுப்புரம் மாவட்டம் சேந்தநாட்டில் ஜூலை 22, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஜூன் 23 ஆம் நாள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாம்களை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

நூற்றாண்டு விழா கூட்டங்கள் :

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்து சமவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப் படுத்திய சர் ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டுகளுக்கான நூற்றாண்டு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கிளைக் கழகங்கள், ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

கழக அமைப்புகளை வலுப்படுத்துதல்:

கழக அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் கிளைக் கழக, ஒன்றியக் கழக, நகரம் மற்றும் மாவட்ட கழகத் கலந் துரையாடல் கூட்டங்களை நடத்துதல். திண்ணைப்பிரச்சாரம், கருத்தரங்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

செவிலியர் நுழைவுத் தேர்வை நீக்குக:

புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு முதல் செவிலியர் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்குக:

புதுவை மாநிலத்தில் அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில், பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழிப் பாடமே இல்லாமல் மாணவர்கள் படிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்ற அறிவிப்பை புதுவை அரசு உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த தோழர்கள் மிகுந்த புத்துணர்ச்சி யோடு கழகத் தலைவரின் உரையினை அசைப்போட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் பங்கேற்றோர்:  

கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ச. சுந்தர்ராஜன், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் செ.பரந்தாமன், கடலூர் மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி, விருத்தாச்சலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்டச் செயலாளர் அன்பு. சித்தார்த்தன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மு.விஜயேந்திரன், அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன். பன்னீர்செல்வம், கழகக் காப்பாளர் ம.சுப்புராயன், மருத்துவர் அன்புமணி, செஞ்சி துரை.திருநாவுக்கரசு, மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன், கோ.வேலு நாத்திக.பொன்முடி உள்பட 120க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment