ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தாங்கள் அறிவித்த இலவச 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளையும் இந்த நிதி ஆண்டில் நிறைவேற்றுவோம் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட் மதிப்பெண் குறித்த மோசடியை விசாரிக்க, கேரள உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை தினமும் கட்டாயம் படிக்க வேண் டும் என கருநாடக அரசு முடிவு செய்துள்ளது.

தி டெலிகிராப்:

* பிரதமர் நரேந்திர மோடிக்கு மகத்தான ஆதரவு இருக்கிறதே என்ற கேள்விக்கு,  அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை துண்டிக்கும் போது தான் இது போன்ற பொய்ப் பிரச்சாரம் செயல்படும் என்று - ராகுல் பதில்.

மக்களவை உறுப்பினர் 

வெங்கடேசன் பேட்டி:

* புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

- குடந்தை கருணா


No comments:

Post a Comment