விழுப்புரம் மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

விழுப்புரம் மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம், ஜூன் 7- விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த சிலர் பாகுபாடுகளுடன் ஜாதி ஆணவத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தி, தாக்கி, சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது திரவுபதி அம்மன் கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி கும்பிட்டுள்ளனர். அப்போது கோயிலுக்குள் நுழைந்த அவர்கள்மீது  ஜாதி ஆணவத்துடன் சிலர் தாக்கியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரவுபதி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட் டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதிப்படுத்திட ஊர்பொதுமக்களி டம் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வந்த சமரச பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இதனால் மேல்பாதி கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் சர்ச்சைக்குள்ளான திரவுபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.  இதனையடுத்து திரவுபதி அம்மன் கோயிலை இன்று (7.6.2023) காலை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். 


No comments:

Post a Comment