தாம்பரம், ஜூன் 7 கடந்த 3.6.2023 அன்று பகல் ஒரு மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையனிடம் தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் ரூ.10,000 மதிப்புள்ள ஒலிபெருக்கி வழங்கி மகிழ்ந்தார்.
அப்போது சோமங்கலம் பேரூராட்சி கழக மகளிரணி தலைவர் அ.ப.நிர்மலா, தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் க.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment