கடலூர், ஜூன் 29- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25.6.2023
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோவில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலா ளர் கவிஞர் க.எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.பெரியார் செல்வன் வரவேற்றுப் பேசினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கு.இரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கலந்துரையாடல் கூட் டத்திற்கு பண்ருட்டி நகர தலைவர் ந.புலிக்கொடி, பண்ருட்டி ஒன்றிய தலைவர் கோ.புத்தன், பண்ருட்டி நகர செயலாளர் கோ.காமராஜ், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் டிஜிட் டல் இராமநாதன், அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் இ.இராசேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வழக்குரை ஞர் ஆ.கனசபாபதி, ஒன்றிய துணை செயலாளர் வழக்குரை ஞர் ஆ.கனகசபாபதி, ஒன்றிய கழக அமைப்பாளர் பா.ஆறுமுகம், கழக தோழர்கள் செ. பன்னீர் செல்வன், க.சின்னதாயி, பெரியார் பிஞ்சுகள் க.பாவேந்தன், க.பகுத்தறிவு, தி.மு.க. தகவல் தொடர்பு அணி சி.தர்மலிங்கம், பகுத்தறி வாளர் கழக தோழர்கள் ப.சிவன், ஆர்.இராஜேந்திரன், விசுவநாதன், வி.அன்பு, திராவிடன், அந்தோணி கென்னடி ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இறுதியில் மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன
வைக்கம் வீரர் தந்தை பெரியார் - வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் ஆயிரம் வினா - விடை போட்டி மாவட்ட அளவில் நடத்துவது எனவும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பயிற்சி வகுப்பு நடத் துவது எனவும் மாதம் ஒரு பிரச் சார கூட்டம் அல்லது கருத்த ரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத் தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:
1. மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் : வீ.வெங்கடேசன்
2. மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் : வி.அருணாசலம்
3. மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்: சி.தர்மலிங்கம்
4. மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் : ப.சிவன்
5. மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர்: இரா.பெரியார் செல்வன் .
No comments:
Post a Comment