மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்

மும்பை, ஜூன் 11- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சுப்ரியா சுலே தலை மையில் அக்கட்சி நிர்வாகிகள் 9.6.2023 அன்று மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு சமூக செயல்பட்டாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதி விரைவில் ஏற்படும் என்று மிரட்டலில் குறிப்பிடப் பட்டு உள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் கொலை மிரட்டல் குறித்த ஆதாரங்களையும் அவர் கள் சமர்ப்பித்தனர். மூடநம்பிக் கைக்கு எதிராக போராடி வந்த நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேயில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது. 

சரத்பவாருக்கு கொலை மிரட் டல் விடுத்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா கட்சி யின் மூத்த தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்துக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதி வில், “எனக்கும் நேற்று முதல் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன.

இதில் பேசியவர்கள் காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டாம் என மிரட்டினர். இது தொடர்பாக காவல் ஆணையர் மற்றும் மாநில உள்துறை அமைச் சரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது" என்றார். இந்தநிலையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷில்பா போட்கே கொலை மிரட்டல் ஒலிப் பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அதில், “சஞ்சய் ராவத் தனது காலை செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவர் சுட்டுக்கொல்லப்படுவார். ஒரு மாதத்திற்குள் சகோதரர்கள் (சஞ்சய் ராவத் மற்றும் அவரது தம்பி சுனில் ராவத்) இருவரையும் சுடுகாட்டுக்கு அனுப்புவேன்" என்று அடையாளம் தெரியாத நபர் கூறுகிறார்.

இந்த ஒலிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் ஒரே நேரத் தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின், சகோதரரான சுனில் ராவத் கூறுகையில் “இந்த மிரட்டல் அழைப் புகள் விவகாரத்தில் அரசு தீவிர மாக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை கூட பெரியதாக எடுத்துக் கொள்ள வில்லை"  என்று குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment