பாபா சாகேப் அம்பேத்கரை சுவீகரிக்க முயன்ற பா.ஜ.க? திராவிடர் கழகத்தின் ஆவடி பகுதித் தலைவரின் பதிலடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

பாபா சாகேப் அம்பேத்கரை சுவீகரிக்க முயன்ற பா.ஜ.க? திராவிடர் கழகத்தின் ஆவடி பகுதித் தலைவரின் பதிலடி!

ஆவடி, ஜூன்.2   சனாதனத்தின் உத்திகளான சாம, தான, பேத, தண்டம் ஆகியவற்றைப் பயன் படுத்தி தங்களுக்கு எதிரானவர் களை தன்வயப்படுத்துவது வழமை. அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தொண்டர்.

ஆவடி மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ. க.வினர், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கருகில், பா.ஜ.க.வின் தத்துவத் தலைவர் அம்பேத்கர் என்பதுபோல் பதாகை வைத் துள்ளனர். அந்தப் பகுதியில் வசிக்கும் திராவிடர் கழகத்தின் ஆவடி பகுதித் தலைவர் அருள் தாஸ் (எ) இரணியன், “அம் பேதகர் யாரென்று உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். தேவையில்லாமல் கலவரத்தை உருவாக்க நினைக்கிறீர்களா?” என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையத்தில், ‘கலவரம் செய்கிற நோக்கில் பதாகை வைத்துள் ளார்கள்’ என்று புகார் கொடுக் கப்பட்டும் பயன் இல்லாமல் போகவே, கடந்த 23-.5.-2023 அன்று, 1956 அக்டோபர் 14 இல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக்கொண்ட, ‘பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவற்றை கடவுளாக மதிக்க மாட்டேன். அவற்றை வணங்க மாட்டேன்’ என்று தொடங்கும் 22 உறுதிமொழிகளை ஒரு பதாகையாகத் தயாரித்து அம் பேத்கர் சிலைக்கு எதிரில் ஒட்டி பதிலடி தந்திருக்கிறார். அதற்கு பா.ஜ.க. தரப்பில் இன்று வரை எதிர்வினை இல்லாமல் இருக் கிறது. 

இப்போது சிலையை பார்வையிடுபவர்கள் அதற்கு எதிரில் இருக்கும் பதாகையையும் படித்துவிட்டுச் செல்கின்றனர்.


No comments:

Post a Comment