பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை அரசமைப்பு சட்டம் திருத்தப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை அரசமைப்பு சட்டம் திருத்தப்படுமா?

 புதுடில்லி,ஜூன்5 - இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப் படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என மாநிலங்களவை தி.மு.க, உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும் பழங் குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கிடைப்பதை உறுதி செய்வ தற்கான முயற்சிகளை மாநிலங்களவை தி.மு.க, உறுப்பினர் பி.வில்சன் முன் னெடுத்து வருகிறார். 

இதுதொடர்பாக ஒன்றிய அமைச் சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில், அவரது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக வில்சன் கூறி யுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவை தி.மு.க, உறுப்பினர் பி.வில்சன் தனது டிவிட்டர் பதிவில்,

“இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற் கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப் பதை மகத்தான வெற்றியாகக் கருது கிறேன். இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு சொத் துக்களின் மீது சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரி சுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு மாண் புமிகு ஒன்றிய அமைச்சர்களுடனான எனது சந்திப்பு மற்றும் கோரிக் கைகளைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் எழுதியுள்ள ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், இந்த விவகாரம் தொடர் பாக பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகிய வற்றின் அமைச்சர்களோடு கலந்தா லோசிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், இந்த விவகாரம் அரசமைப்பின் 7ஆவது அட்டவணையின் பிரிவு மிமிமி-இன் படி மாநிலப்பட்டியலில் வருவ தால் மாநில அரசுகளுடனும் கலந்தா லோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.” என குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment