சென்னை, ஜூன் 6 - தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா குழு கலந்துரையாடல் கூட்டம் நேற்று (5.6.2023) முதலமைச்சர் முகாம் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வருங்கால தலைமுறையினர் நினைவு கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் எங்கெங்கு நடத்திடுவது என்று தீர்மானிக்கப் பட்டது. மேலும் திருவாரூர் கலைஞர் கோட்டம் வரை கலைஞர் சுடர் ஓட்டம், கவியரங்கம், பேச் சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா, விளையாட்டுப் போட்டிகள், கவியரங்கங்கள் - பொதுக்கூட்டங்கள் என்று 34 வகையான நிகழ்ச்சிகளை இந்த ஓர் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-
“நூற்றாண்டுநாயகர் முத்தமிழறிஞர்கலைஞர்” அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழு மையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என் றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத் துக்கு வழங்கிட தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட “தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாக் குழு"வின் கலந்துரையால் கூட்டம் நேற்று (5.6.2023), காலை, சென்னை, ஆழ்வார்பேட்டை, தி.மு.க. தலைவர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா, கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, தயாநிதிமாறன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க. தலைவர் அவர்களுடன், பொதுச் செய லாளர் அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.
இக்கூட்டத்தில் தமிழினத் தலைவர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அமைந்திடவேண்டுமெனதீர்மானிக்கப்பட்டது.
1)மாணவர்களிடையே "வினாடி வினா" போட்டிகள்: இப்போட்டிகளில் பங்கு பெறுவோர் அதற்கான செயலியில் (APP) தங்கள் பெயரை பதிவு செய்திட வேண்டும்.
முதல் கட்டம்: மாவட்ட வாரியான போட்டி கள்
இரண்டாவது கட்டம் : மண்டல வாரி யான போட்டிகள்
மூன்றாவது கட்டம் : மாநில அளவிலான போட்டிகள்
2) கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச் சுப் போட்டி
3) கலை இரவு (தலைவர் கலைஞர் சார்ந்த கலை நிகழ்ச்சிகள்)
4) கலைஞர் சுடர் ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்டம்
5) மாவட்ட வாரியாக 'மாரத்தான் தொடர் ஓட்டம்’
6) மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள்.
7) கலைஞர் எழுதிய திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல்.
8) தலைவர் கலைஞர் குறித்த நிகழ்வு களையும் தகவல்களையும் சமூக வலைதளங் களில் REELS தயாரித்து ஆண்டு முழுவதும் வெளியிடுதல்.
9) தொழிற் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள்
10) சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் தலைப்புகள்: 'மாநில சுயாட்சி”, 'அரசியல் சட்ட மாண்புகளை காப்போம்'
11) மகளிர் அணியின் சார்பில் “PODCAST”.
12) கழகச் சொற்பொழிவாளர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம்
13) SYMPOSIUM IN ENGLISH (ஆங்கில கருத்தரங்கங்கள்)
14) கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களை கொண்டு, மாவட்ட அளவில் “கருத்தரங்கங்கள்”.
சொல்லரங்கம்
15) தலைவர் கலைஞர் அவர்களின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள்
கலந்து கொள்ளும் “ஆய்வரங்கங்கள்”.
16) கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வின்போது திரைத் துறைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் “கலை நிகழ்ச்சி”.
17) திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.
18) அனைத்து நிகழ்ச்சி களை யும் சமூக வலைதளத்தில் பகிர்தல்.
19) கல்லூரிகளில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்.
20) தலைவர் கலைஞரின் படைப்புகள் குறித்து கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல் லரங்கம். கழக மாவட்டங்கள்
21) அனைத்திலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்கள்
22) மாவட்டந்தோறும் திரைப்ப டக் கலைஞர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சிகள்/கருத்தரங்குகள்.
23) மாவட்ட தலைநகரங்களில் “ஒளிப்பட கண்காட்சி”.
24) அயலக அணியின் சார்பில் தமிழர்கள் வாழும் வெளிநாடுக ளில் கருத்தரங்கம்.
25) மகளிர் அணியின் சார்பில் மாவட்டந் தோறும் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள்.
26) ‘தேதி சொல்லும் சேதி' வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடு.
27) கலைஞர் நூற்றாண்டில் அவர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக் கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாகச் செயல்பட ஏற்பாடு.
28) மாவட்ட வாரியாக பேச்சுப் போட்டி நடத்தி மாநில அளவில் சிறந்த 100 பேச்சாளர் களைக் கண் டறிந்து கழக சொற்பொழிவாளர்க ளாக மாற்றுதல்.
29) மண்டல வாரியாக பேச்சாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு.
30)கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இடங்களான கல்லூ ரிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமத்துவபுரங்கள் ஆகிய வற்றை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அந்த இடங்களில் நிகழ்ச்சிகள்.
31) “கலைஞர் 100” என்ற பெய ரில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் பக்கங்களைத் தொடங்கி பரப்புதல்.
32) கலைஞரின் முக்கியமான படைப்புகளை மாணவர்களுக்கு பரிசாக வழங்கிட ஏற்பாடு.
33) மகளிர் அணியின் சார்பில் “கலைஞரும், மகளிர் மேம்பாடும்” எனும் தலைப்பில் 'பயிற்சிப் பாசறைகள் மற்றும் பயிலரங்கங்கள்”.
34) தலைவர் கலைஞர் அவர் கள் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந் தோறும் காட்சிப்படுத்துதல்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment