கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.6.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
*பாட்னாவில் வரும் 23ஆம் தேதி பாஜக.வுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மம்தா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்,
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜகவை வீழ்த்த முரண்பாடுகளை களைந்து ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும்: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
* இரு ஜாதியினரிடையே ஏற்பட்ட மோதலால், விழுப்புரம் அருகே மேல்பாதி கிராம திரவுபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நான் கோட்சேவை புரிந்துகொண்டு படித்த வரையில், அவரும் ஒரு தேசபக்தர் என பாஜகவைச் சேர்ந்த உத்தரகாண்ட் மேனாள் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் பேச்சு.
* 2024 பொதுத் தேர்தலில் மோடியின் கவர்ச்சியும், இந்துத்துவாவும் மட்டுமே வாக்கெடுப்பில் வெற்றி பெற போதாது என ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் கருத்து.
தி டெலிகிராப்:
* மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி இன்னும் அமைதியாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment