இராணிப்பேட்டை, ஜூன் 23- இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக புத்தாக்க விழா மாவட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி வாலாசாப் பேட்டை மாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்றார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் இந்த கலந்துரையாடலை வரவேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் ஒன்றிய தலைவர் வாலாசாப் பேட்டை இரா. தமிழ்வாணன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் த.க.பா.புக ழேந்தி மற்றும் செயலாளர் ந.இராமு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளர் பு.எல்லப்பன் தொடக்க உரையாற்றினார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுச் செய லாளர் ஆ.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்ந்தனர்.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை 89 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்ற 'விடுதலை' பத்திரிகைக்கு சந்தாவை மேலும் 20ஆக உயர்த்துவது எனவும், தந்தை பெரியார் நடத்திய 'வைக்கம் போராட்டம்' 100ஆவது ஆண்டை முன் னிட்டு வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நடத்துவது எனவும், பகுத்தறிவாளர் கழகத்திற்கு 100 உறுப்பினர் களை சேர்ப்பது என்றும் 100 பேரும் களப் பணியாளர்களாக முழு நேரமும் பணி யாற்றுவது எனவும், புதிய உறுப்பினர்களாக மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ப்பது என்றும் பின்னர் அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது எனவும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும், அனைத்து ஒன்றியங்களிலும், பகுத்தறிவு கழகத்தின் கிளைக் கழகம் ஆரம்பிப்பது எனவும், இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவராக த.க.பா.புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளராக ந.இராமு ஆகி யோரை நியமனம் செய்வதெனவும், வாலா சாப்பேட்டை நகரத்தில் 'காந்தியார் சிலைக்கு' எதிரில் 'காமராஜர் பூ' சந்தை நுழைவு வாயிலில் 'தந்தை பெரியார்' சிலை அமைப்ப தெனவும் ஏழு தீர்மானங்கள் இந்த கலந் துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment