அனுதாபத்தோடு கூறுகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

அனுதாபத்தோடு கூறுகிறோம்!

அண்ணாமலைக்கு அரோகரா! கிரிவலம் சென்ற பக்தர் சாவு

திருவண்ணாமலை, ஜூன் 5 சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந் தவர் ராஜேஷ் (வயது 40). இவர், நேற்று முன்தினம் (3.6.2023) முழு நிலவையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார். செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது சக பக்தர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் விபத்தில் பலி

திருவண்ணாமலை, ஜூன் 5ஆந்திராவில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு காரில் சென்று கொண்டு இருந்த போது லாரி மீது மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த பக்தர்கள் கார் ஒன்றில் திருவண்ணா மலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பீலேறு அருகே உள்ள எம்.ஜே.ஆர் கல்லூரி அருகே நேற்று (4.6.2023) காலை சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கியது. இந்த நிலையில் முன்பகுதியில் பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும், காரில் இருந்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு பீலேறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்தவர்கள் உடல்கள்  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்து காரணமாக அந்த வழியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment