அரூர் கழக மாவட்டம் கடத் தூரில் 18-6-2023 அன்று மாலை 5 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் முப் பெரும் விழா கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் கு.தங்க ராஜ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன், தி.மு.க. மாநில ஆதி திராவிடர் நல குழுத் துணை செயலாளரும், மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவரு மான சா.இராஜேந்திரன், கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ் கு.மணி, நகர திமுக செயலாளர் தீ.மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில பொறுப்பாளர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பாலையா, மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் தீ.சிவாஜி, மாவட்ட ஆசிரியரணி செயலாளர் மு.பிரபாகரன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலை வர் இ.சமரசம், கடத்தூர் பேரூ ராட்சி துணைத் தலைவர் வினோத், நகர கழக தலைவர் சுப.மாரிமுத்து, பெரியார் பெருந் தொண்டர் நெடுமிடல், நகர பகுத்தறிவாளக் கழக தலைவர் க.தி.சங்கர், ஒன்றிய கழகத் தலை வர் வே. தனசேகரன், ஒன்றிய கழக அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
இசை நிகழ்ச்சி
மாலை 4 மணியிலிருந்து 6.30 மணி வரை திருத்தணி பன்னீர்செல்வம் கலைக்குழுவி னரும், திமுக பாடகர் நாகூர் அனிபா குரல் சேலம் ஜான் பாஷாவும் இணைந்து தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் பற்றிய பாடல்களை பாடினர். இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கேட்டதுடன் பாராட்டி பாடகர்களுக்கு திராவிடர் கழகம், தி.மு.க., வி.சிக தோழர்கள் போட்டி போட்டு நன்கொடை வழங்கினர்.
தொடர்ச்சியாக திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில திராவிடர் கழக கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
தருமபுரி மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் பெ.கோவிந்தராஜ் புரட்சிக ரமான முழக்கமிட, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சரு மான பி.பழனியப்பன் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
திராவிடர் இயக்க செயல் பாட்டாளரும், பெரியார் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரோடு பழகி தன் வாழ்நாளில் 85 ஆண்டுகள் சுயமரியாதைக் கொள்கையோடு வாழ்ந்து வரும் புள்ளிமான் என்கின்ற இராமநாதன் அவர்க ளுக்கு கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவ தனி, திமுக மாவட்ட செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனி யப்பன் ஆகியோர் இணைந்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
அதேபோன்று சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக் கும் சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை ஒட்டி துண்ட றிக்கை, சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததுடன் மாவட்ட மாண வர் கழக தலைவர் சமரசம், யாழ்திலீபன் தலைமையில் தோழர் கள் கடைவீதியில் துண்டறிக்கை கொடுத்தது நல்ல பிரச்சாரமாக அமைந்தது. இது பொதுக் கூட்டமா? மாநாடா? என்று கேட்கின்ற அளவுக்கு மக்கள் திரள் கூட்டமாக கூட்டம் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கட்டி போட்டது போல் கலையாமல் இருந்தார்கள். அரசியல் கட்சிகளுக்கு கூட கூடாத கூட்டம் கழக கூட்டத் திற்கு வந்துள்ளது என பாராட்டி பேசி சென்றனர்.
இறுதியாக மாவட்ட மாண வர் கழக தலைவர் இ. சமரசம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment