வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை

பெங்களூரு, ஜூன் 21- முதலமைச்சர் சித்தராமையாவை கருநாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் முதலமைச்சரின் இல்லத்தில் சந் தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சித்தராமையா கூறியதா வது:-

கருநாடகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந் தது. அப்போது சமூக வலைத் தளங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தவறான தகவல்களை அதிகளவில் பரப்பினர். அதே போல் தற்போது காங்கிரஸ் ஆட் சிக்கு வந்த பிறகு சமூக வலைத் தளங்களில் அரசுக்கு எதிராக போலி செய்திகள் அதிகமாக பரப் பப்பட்டு வருகின்றன. நமது அர சியல் எதிரிகள் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் வருவ தால், போலி செய்திகளை அதிக மாக பரப்பி சமுதாயத்தில் அமை தியை குலைக்க முயற்சி செய்வார் கள். அதனால் தொடக்கத்திலேயே பொய் செய்திகள் எங்கிருந்து பரப் பப்படுகிறது என்பதை கண்டறிந்து அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை குழந்தைகள் கடத்தல், மாட்டிறைச்சியை கொண்டு செல் வது உள்ளிட்டவை குறித்து பொய் செய்திகளை பரப்பி வன்முறையை ஏற்படுத்தினர். இந்த முறை பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளை மக்கள் மிக தெளிவாக நிராகரித்துள்ளனர். நாட்டை பாதுகாக்க அடுத்த ஆண்டு (2024) நாம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் வதந்திகள் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அதனால் இவற்றை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண் டும்.

இதற்கு முன்பு பெங்களூரு நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டது.  பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் அந்த உண்மை கண் டறியும் குழுவை ரத்து செய்துவிட்ட னர். அதனால் அந்த குழுவை மீண் டும் அமைக்க வேண்டும். சைபர் குற்ற காவல்துறை வதந்திகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மாதந்தோறும் இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும். 

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

No comments:

Post a Comment