சாராயம் குடித்து பூசாரி சாவு பக்தி போதை ஏறியதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

சாராயம் குடித்து பூசாரி சாவு பக்தி போதை ஏறியதோ!

மேலூர், ஜூன் 4 கிடாரிப்பட்டியில் நான்கு பேர், 'டாஸ்மாக்'கில் மது வாங்கி குடித்த நிலையில், கோவில் பூசாரி ஒருவர் இறந்தார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.

மதுரை மாவட்டம், கிடாரிப்பட்டி பனையன் 45, பெரியநாச்சியம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். கோவிலில் பெயின்ட் அடிக்கும் வேலை நடக்கிறது. பனையன் உறவினர் வீரணன் உள்ளிட் டோர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2.6.2023 அன்று  வீரணன் கிடாரிப்பட்டி டாஸ்மாக் கடை யில் மது வாங்கினார். அவருடன் பனையன், கருவா மொண்டி, வீரணன் மற்றும் 16 வயது சிறுவன் கோவில் எதிரே அமர்ந்து மது அருந்தினர். சிறிது நேரத்தில் பனையன் வாயில் நுரையுடன் மயக்க மடைந்தார்.

வீரணன் தவிர மற்றவர்களும் மயக்க மடைய, அங்கிருந்தவர்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பனையனின் உடல் நிலை மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். கருவா மொண்டி மதுரை அரசு மருத்துவமனை யிலும், சிறுவன் மேலூர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சையில் உள்ளனர். வீரணனிடம் மதுரை மாவட்ட காவல் துறை தலைவர்  பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரித்தனர். சம்பவ இடத்தில் மேலாதிக காவல் கண்காணிப்பாளர் கருப்பையா, தாசில்தார் செந்தாமரை விசாரித்தனர். மேலவளவு காவல்துறையினர் மதுக் கடையில் வீரணன் மது வாங்கி சென்ற, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். வீரணன் மது வாங்கிக் கொடுத்ததும் அங்கிருந்து கிளம்பியதாக கூறுகிறார். ஆனால், வீரணனும் சேர்ந்து குடித்ததாக கருவா மொண்டியும், 16 வயது சிறுவனும் கூறுகின்றனர். மது போதையில் தண்ணீ ருக்கு பதிலாக வீரணன், தவறுதலாக பெயின்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின் னரை கலந்து கொடுத்தாரா என்ற கோணத் தில் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment