வெளிநாட்டு முதலீடுகள் ஆளுநர் விஷமத்தனமான கருத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

வெளிநாட்டு முதலீடுகள் ஆளுநர் விஷமத்தனமான கருத்து!

வைகோ கடும் கண்டனம்

சென்னை,ஜூன்6- மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,

உதகையில் நடைபெற்ற பல் கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட் டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வரு கிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக் கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற் கொண்டுவிட்டுத் திரும்பி இருக் கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்.

இந்தப் பயணத்தில் அய்.பி நிறு வனம், டைசல் நிறுவனம், ஹோம் ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக தமிழக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பய ணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார்.

ஆளுநரின் பேச்சும் செயல் பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண் டனத்திற்கு உரியது.

தமிழ்நாட்டின் முதல் விரோ தியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத் தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.

-இவ்வாறு வைகோ குறிப் பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment