விராலிமலை, ஜூன் 23 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகத்தின் பேருந்துகள் புனரமைப்புப் பணி களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங் களின் 1,000 பழைய பேருந்துகளை புனரமைத்து, புதிதாக கூண்டு கட்டும் பணிக்காக, ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
முதல்கட்டமாக 125 பேருந்துகளை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, கரூரில் உள்ள ஜெமினி கோச் நிறுவனத்திடம் 43 பேருந்துகளும், மதுராந்தகத்திலுள்ள ஆரோ கோச் நிறுவனத்தில் 25 பேருந்துகளும், விராலிமலையிலுள்ள குளோபல் டிவிஎஸ் நிறுவ னத்தில் 32 பேருந்துகளும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பெங்களூரிலுள்ள கேஎம்எஸ் கோச் நிறுவனமும் 25 பேருந்துகளை புதுப்பித்து வருகிறது. இந்த நிலையில், விராலிமலையில் உள்ள குளோபல் டிவி எஸ் தனியார் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பேருந்து புதுப்பிக்கும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 21.6.2023 அன்று ஆய்வு செய்தார்.
புனரமைக்கப்படும் பேருந்துகளின் தரம், கட்டு மானம், தோற்றப்பொலிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பொதுமக்களின் வசதிக்காக பேருந்து கட்டமைப்புகளில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் நிறுவன அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார். மேலும், கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, பணிகளை விரைந்து முடித்து ஒப்படைக்கவும், நிறுவன அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது குளோபல் டிவிஎஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சிறீனிவாசன், துணைத் தலைவர் ஆர்.என்.லிங்கம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல் மற்றும் புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் கே.குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment