"திராவிடர் கழகம்" பற்றி கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

"திராவிடர் கழகம்" பற்றி கலைஞர்

“திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றை நான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூடச் சொல்ல மாட் டேன். அது தவறு என்று நான் கருதுவதால் அல்ல.

எப்படி ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கம் தேவையோ அப் படித்தான் திராவிடர் கழ கமும், திராவிட முன்னேற் றக் கழகமும் ரூபாய் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்று நான் ஆத்தூரிலே பெரியார். சிலைத் திறப்பு விழாவிலே பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

திராவிடர் கழகம் இல்லாமல் தி.மு.கழகம் இல்லை. தி.மு.கழகத்தின் உணர்வில்லாமல் திராவிடர் கழகம் இல்லையென்று நான் சொல்லத் தயாராக இல்லை.

கரன்சி நோட்டுக்கு இரண்டு பக்கம் தேவை ஒரு பக்கத்தை மட்டும் அழகாகச் சுவரிலே ஒட்டி வைத்துவிட்டு, இந்த நோட்டு செல்லும் என்று சொன்னால் அது செல்லாது. ஏனென்றால் பின்புறம் ஒட்டப்பட்டு விட்ட காரணத்தால் அது பயன்படாது.

அது பயன்படாமல் போய்விட்ட காரணத்தால் என்னதான் அழகாக கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்தாலும் அந்த நோட்டு செல்லுபடியாகாது.

அதைப்போல திராவிட முன்னேற்றக் கழகம் திராவிடர் கழகம் என்கின்ற இரண்டு புறத்தைக் கொண்ட இந்த கரன்சி நோட்டைக் கையிலே வைத்துக் கொண்டிருக்கிற வரையிலேதான் செல்லும்.

அதிலே திராவிடர் கழகம் என்று பகுதியைச் சுவரிலே ஒட்டிவிட்டு. “பார்! பார்! தி.மு.கழகம் எவ்வளவு அழகாகத் தெரிகிறது’ என்று சொன்னால் திராவிடர் கழகம் என்கிற பின்பக்கம் இல்லாமல் தி.மு.கழகம் செல்லாது.


No comments:

Post a Comment