மணிப்பூரில் சங்பரிவாரத்தின் மதவெறி ஆட்டம்! மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

மணிப்பூரில் சங்பரிவாரத்தின் மதவெறி ஆட்டம்! மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, ஜூன் 21- வட கிழக்கு மாநிலமாகிய மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கிருந்து வரும் செய்தி கள் எங்கே அது மயானப் பூர் ஆகிவிடுமோ எனும் அச்சத்தை எழுப்புகிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப் பட்டி ருக்கிறார்கள், அய்ம்பதாயிரத்திற்கு மேற்பட் டோர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார் கள். "டபுள் இஞ்சின் ஆட்சி" என்று பிரதமர் மோடி பெருமையாகப் பேசும்-ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடக்கும்-மாநிலம் தான் அது. அதன் இன் றைய பரிதாப நிலையை மக்கள் ஒற்றுமை மேடை கவலையோடு பார்க்கி றது.

அங்குள்ள மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து நிற்பது அவர் களுக்கான இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு சட்டங் கள். அந்தக்கவசத்தை தகர்க்கும் வகையில் சம வெளியில் வாழும் மக்க ளையும் மலைவாழ் மக் களாக பட்டியலிட சதி செய்கிறது பாஜக. அந்த அநியாயத்தை எதிர்த்துக் கிளம்பிய போராட்டம் இன்று அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கிற, மாநிலமே கொந்தளிக்கிற நிலையைக் கொண்டு வந்துள்ளது.

பிரச்சினைக்கு நியா யத் தீர்வு காணாத பாஜக அரசு, எரிகிற கொள்ளி யில் எண்ணெயை ஊற் றும் வகையில் தனது மத வெறி ஆட்டத்தை அதில் சேர்த்துள்ளது. அதாவது பிரச்சினையை கிறிஸ்த வர்களுக்கு எதிரானதாக மாற்றி வருகிறது, மாநிலத் தில் மதப்பகைமை எனும் விஷத்தை தூவியுள்ளது.

இம்பாலின் ஆர்ச் பிஷப் டொமினிக் லுமன் எழுதியுள்ள கடிதம் சில அதிர்ச்சிகரமான விவரங்களைத் தருகிறது. "வன்முறை துவங்கிய 36 மணி நேரத்தில் மெய்தே கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான 249 தேவா லயங்கள் அழிக்கப்பட் டன. குக்கிகள் மற்றும் மெய்தேக்களுக்கு இடையிலான மோதலில் மெய்தே பகுதியில் உள்ள இந்த 249 தேவாலயங் களை மெய்தே கூட்டம் ஏன் எரித்தது? தேவால யங்களை மீண்டும் கட் டக் கூடாது என்றும் சில பாதிரியார்கள் மிரட்டப் பட்டுள்ளனர். இது இன்னாரு 'கர் வாபசி' அல்லவா?"(இண்டியன் எக்ஸ்பிரஸ் 18-06-23) என்கிறார் ஆர்ச்பிஷப்.

மணிப்பூர் விவகாரத் திற்கு ஒரு மதவெறித் திரு கல் தரப்பட்டிருக்கிறது என்றால் அங்கே சங்பரி வாரத்தின் கொடுங்கரம் இருக்கிறது என்று பொருள். அதிலும் மாநி லத்தில் பாஜக ஆட்சி நடப்பதால் மதப்பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் அதன் கேடு கெட்ட எண்ணம் விளையாடுகிறது எனலாம்.

மணிப்பூரில் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரத்தை மாநில அரசு பாதுகாக்க வேண் டும் என்றும், அதை ஒன் றிய அரசு உத்திரவாதப் படுத்த வேண்டும் என் றும் மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி கேட் டுக்கொள்கிறது. தமிழ் நாடு போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் பொங்கும் பாஜக தலைவர்கள், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கிழி பட்டுக் கிடக்கும்போது காக்கும் கள்ள மவுனத்தை மக்கள் கவனிக்கவே செய் கிறார்கள் என்பதை மேடை சுட்டுகிறது.

No comments:

Post a Comment