டில்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

டில்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை

டில்லி வளர்ச்சி ஆணையத்தில் ( டி.டி.ஏ.,) காலியி டங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 236, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 194, அசிஸ் டென்ட் செக்சன் ஆபிசர் 125, அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 51, லீகல் அசிஸ்டென்ட் 15, சர்வேயர் 13, வடிவமைப்பு உதவியாளர் 9 உட்பட மொத்தம் 687 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, ஜூனியர் செக்ரட்ரியட் பணிக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பதவி வாரியாக மாறுபடும்.

வயது : 2.7.2023 அடிப்படையில் சர்வேயர் 25, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர் 27 மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : இணைய வழியாக எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 2.7.2023

விவரங்களுக்கு : dda.gov.in

No comments:

Post a Comment