திருவரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

திருவரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம்

திருச்சி, ஜுன் 8-முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக் கம், திராவிட மாடல் ஆட்சி சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஜுன் 2 ஆம் தேதி  மாலை திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் நகர  கழக தலைவர் கண்ணன் தலைமையில்  நடைபெற்றது. 

பிரச்சாரக் கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.மோகன்தாஸ், மண்டல கழகத் தலைவர் ஆல்பர்ட், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் தேவா, மாநகர தலைவர் துரைசாமி, மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், விடுதலை வாசகர் வட்டத் துணைத் தலைவர் குணசேகரன், வழக் குரைஞர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகை யில், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சமூக நீதி திட்டங்கள் அனைத்தும் முத்தமிழறிஞர் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியாரின் மாணவராக இருந்த காரணத்தினால் பெரியாரின் கோரிக் கைகளை ஏற்று கலைஞர் செயல்படுத் தினார். 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இக்கூட்டத் தில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜ், செய லாளர் வழக்குரைஞர் அரிகரன், சசிகாந்த், சம் பத், குணா, ராமன், கார்த்திக் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும், நேதாஜி, முபா ரக், பாச்சூர் அசோகன், இளங் கோவன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர் களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். 

அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். நகர செயலாளர் இரா.முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment