சென்னை, ஜூன் 22- கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில், அதனை நீட்டித்து அரசு உத்தர விட்டுள்ளது.
கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்காக, அரசு தரப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு இணைய வழி வாயிலாக விண்ணப் பிக்க கடைசி நாளாக மே.31 அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெற்றோர் மத்தியிலிருந்து எழுந்த வேண்டுகோளை அடுத்து, முடிவடைந்த கால அவகாசத் தினை மேலும் நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
இதன்படி கல்லூரியில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவ மாணவியர் ஜூன் 30-க்குள், இணைய வழி வாயிலாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்கள் மற்றும் இணைய வழி விண்ணப்ப நடைமுறைகளுக்கு அணுக வேண்டிய இணையதளம்: https://tnadtwscholarship.tn.gov.in/ எஸ்.சி., எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித்தொகை தொடர்பான அய்யங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கட்டண மற்ற தொலைபேசி எண்: 1800-599-7638. திங்கள் முதல் சனி வரையிலான வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment