ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஆம்பூரில் வசிக்கும் இளங்கோவன், திராவிட இயக்க நூற்றாண்டு நூலகத்தை நடத்தி வருகிறார். 'குடிஅரசு' இதழ் கவிதைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.பில்., பட்டம் பெற்றார். ஆய்வுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேருதவி புரிந்தார். 'விடுதலை' இதழின் நீண்ட நாள் வாசகரான இவர் தனது இல்லத்திற்குத் 'தந்தை பெரியார் தமிழ் பண்ணை' என பெயர் சூட்டியுள்ளார். இவரது குடும்பத்தினர் கழகக் கொள்கைகளை 12 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் திராவிட இயக்க கொள்கையில் மூன்றாம் தலைமுறையினரான பாரி மற்றும் அவரது குடும்பத்தினர், இராஜகுமாரி, இளங்கோவன், பாவை, மருதன் ஆகியோர் தமது இல்லத்தில் தந்தை பெரியார் சிலையினை திறந்து வைத்துள்ளது அவர்களது கொள்கையை பறைசாற்றும் முக்கிய நிகழ்வாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment