தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு!

தூத்துக்குடி,ஜூன்2-- தூத்துக்குடி மாவட்டத்தில் கழக கொள்கை குடும்பத்தினர் பகுத்தறிவாளர்கள் இன உணர்வாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்து உறவாடும் சுற்றுப்பயணம் 31. 5 .20 23 அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழக தலைவர்மு. முனியசாமி மாவட்ட கழக செயலாளர் கோ. முருகன் காப்பாளர் மா. பால் ராசேந்திரம் முனைவர் கி.சவுந்தர்ராசன் ஆகி யோருடன் பங்கேற்றோம்.  காலை ஏழு முப்பது மணிக்கு முத்தையா புரத்தில் மாவட்ட செயலாளர் தா செல்வராசு இல்லத்தில் கழக குடும் பத்தினரை சந்தித்தோம்.மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் செ.வள்ளி வரவேற்றார்.முத்தையா புரத்தில் கொள்கை விளக்கம் கூட் டம் நடத்துவது என்றும்,கிளைக் கழக அமைப்பு தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது .கழகத்தின் புதியவரவான  ஆ.மணி கண்டனை வரவேற்றுசிறப்பித் தோம்.. அடுத்து குலசேகரப்பட்டி னத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்தித்தோம் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கூட்டத்தை கழகக் கொடி யேற்றி சிறப்பாக நடத்துவோம் என உறுதிமொழிந்தார் 

தொடர்ந்து திருச்செந்தூர் ஒன்றியம் நடு நாலு மூலைக் கிணறு சென்று பெரியார் பெருந்தொண் டர் ரெ.சேகர் இல்லத்தில் சந்தித் தோம்திருச்செந்தூர் ,நடுநாலு மூலை கிணறு ஆகிய ஊர்களில் தமிழர் தலைவர் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத் துவதற்கு ஆவலாக உள்ளதாக கூறினார். 

தொடர்ந்து திருவைகுண்டத் தில் பகுத்தறிவாளர் கழக செயலா ளர் சோ.பொன்ராஜ் இல்லத்திலும், கழகப் பொறுப்பாளர் சு .திருமலை குமரேசன் இல்லத்திலும் கழகக் குடும்பத்தினரை   சந்தித்தோம் திருவைகுண்டத்தில் தமிழர் தலைவர் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது .தொடர்ந்து புதுக்கோட்டையில் மாவட்ட கழகச் செயலாளர் கோ. முருகன் இல்லத்தில் குடும்பத்தினர்  அன்பொழுக வரவேற்று அனை வருக்கும் நண்பகல் உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.   புதுக்கோட்டை யில் கழக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி ஒன்றியம் கீழத்தட்டப் பாறையில் பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் கரு.மாரியப்பன் ,மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் தெய்வப் பிரியா ஆகியோர் வர வேற்றார்கள்.கீழத்தட்ட பாறை யில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது .

தொடர்ந்து ஜம்புலிங்கபுரம் காலனியில் முன்னாள் ராணுவ வீரர்சு. கோவில் பிள்ளை தோட் டத்தில் குடும்பத்தினரை சந்தித் தோம் விடுதலை உண்மை இதழ் களின் சிறப்பினை கூறிமகிழ்ந்தார்.

தொடர்ந்து எஸ். குமாரபுரம் கார்த்திகேயன் இல்லத்தில் குடும் பத்தினரை சந்தித்தோம். குறுக்கு சாலையில் கழக பொதுக்கூட்டம் விரைவில் நடத்த முடிவு செய்யப் பட்டது .

தொடர்ந்து இ. வேலாயுதபுரம் பெரியார் பெருந்தொண்டர் முனி யசாமி இல்லம் சென்றடைந்தோம் மு.பாலமுருகன் அன்புடன் வர வேற்றார். கழகக் கொடியேற்றுவது என்றும் தெருமுனை கூட்டம் நடத் துவோம் என்றும் உறுதி கூறினார்.

தொடர்ந்து விளாத்திகுளம் நகரில் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் நாகராசன் இல்லத்தில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மேல்மாந்தை கா.பழனிச்சாமி பங்கேற்றார்.ஒன்றியம் முழுவதும் புதிய இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்து கழக கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்துவது என்றும், மேல்மாந்தையில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார், டாக்டர் அம் பேத்கர் சிலைகளை திறந்து வைப் பதற்கு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் தேதியை எதிர் பார்ப்பாக ஆவலுடன் கூறினர்  

தொடர்ந்து சவேரியார்புரம் செ.செல்லத்துரை இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்தோம் ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர் சி செஜிந்தா மகிழ்ச் சியோடு வரவேற்றார் .விரைவில் சவேரியார்புரத்தில் தெருமுனை கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது .தொடர்ந்து இரவு 10 மணி அளவில் மாவட்ட பகுத்தறி வாளக் கழகத் தலைவர்  ச. வெங் கட்ராமன் இல்லம் சென்றடைந் தோம் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றார்கள் கழகக் கொடி யேற்றி விரைவில் கூட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. 

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் கட்டளைகளை நிறை வேற்ற கழகப்பொறுப்பாளர்கள் புதிய உற்சாகத்தோடு களப் பணி யாற்றுகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment