கருப்பு ஆடை அணிந்து வரக்கூடாது என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (28.06.2023) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளவிருக்கிறார் என்ப தற்காக கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று தடை விதித்து நேற்று முன் தினம் (26.06.2023) சேலம் பெரியார் பல் கலைக்கழகப் பதிவாளர் கையொப் பமிட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
அதில் காவல்துறையின் பரிந்துரையின் பெயரில் கருப்பு உடைகளை தவிர்க்கு மாறும் கைப்பேசி கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைக் கண்டித்து கடுமையான எதிர்வினையை 'விடுதலை' ஏடு வெளியிட்டிருந்தது. பல்வேறு அமைப்புகளும் சமூக ஊடகங்களில் பொதுமக்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (27.6.2023) சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் காவல்துறை கண் காணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார். அதில், "பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. எனவே மேற்படி இடத் தில் நடைபெறும் விழாவில் பங்கு பெறுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்து சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் எவ்வித அறிவுறுத்தலும் வழங் கப்படவில்லை என்பது தெரிவித்துக் கொள்ளப் படுகிறது" என்று சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனை அடுத்து சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் நேற்று (27.6.2023) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" என்று அறி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை தலையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுத்திருப் பதாகச் சொல்லப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக் கூடாது என்ற சுற்ற றிக்கை திரும்பப் பெறப்பட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற் றுள்ளனர்.
எனினும் காவல்துறையின் அறிவு றுத்தலின் படி கருப்பு ஆடை அணிந்து வரக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டு, காவல்துறையின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இருப்பது யார் என்பது குறித்தும், ஏன் என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் போக்கு பெரிதும் இந்துத்துவ சக்தி களுக்கு, ஜாதியவாதிகளுக்கும் ஆதர வாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இதற்கு முன்பே பல்கலைக்கழக முகப்பில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மறைக் கப்பட்டது தொடர்பாகவும், அங்கு நிலவும் ஜாதி ஆதிக்கம் தொடர்பாகவும் கண்டனம் எழுந்ததும், திராவிட மாணவர் கழகம் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment