அதிர வைக்கும் தகவல்கள்!
புதுடில்லி, ஜூன் 3 மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர் பிரின் பூஷன் சிங் என்று 2004ஆம் ஆண்டு கடிதம் எழுதிவைத்து விட்டு அவரது மகன் தற்கொலை செய்துகொண்ட செய்தியை வெளியிட்டுள்ளது ஆங்கில நாளிதழ்.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்வன்கொடுமை செய்த பிரிஜ்பூஷன் மீது மோடி கரிசனம் காட்டி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக பார்ப்பனர்கள் பிரிவினர் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு பிரிஜ்பூஷனின் மகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண் டார். அப்படி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் ஹிந்தியில் எழுதிய கடிதத்தை 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது
அதில் கூறப்பட்டுள்ளதாவது. ”எனது தந்தை மோசமானவர். அவரது நடவடிக்கை சரியில்லை. எனது சகோதர சகோதரிகளிடம் அவர் நடக்கும் விதம் மோசமாக உள்ளது. அவர் எங்களுக்கு அப் பாவாக இருக்க தகுதி இல்லாதவர். இப்படிப்பட்ட ஒரு நபருக்கு பிள்ளையாக இருப்பதை விட சாவதே மேல்” என்று ஹிந்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது மகள் தற்கொலை செய் துள்ளார். இந்த தற்கொலை வழக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியே முடித்து வைக்கப் பட்டுவிட்டது. இருப்பினும் தற் போது "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளிதழ் சமூகவலைதளத்தில் ஹிந்தியில் எழுதப்பட்ட கடி தத்தை வெளியிட்டுள்ளது
2004 ஆம் ஆண்டே பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியான பிரிஜ்பூஷன் தனது குடும்பத்து உறுப்பினர்களிடையே நம்பிக் கைக்குத் தகுதியில்லாமல் நடந்து கொண்டவர் என்று குறிப்பிட் டுள்ளது
அப்போதே பிரிஜ்பூஷன் மீது 38 மோசமான கிரிமினல் குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலை யங்களில் இருந்தன. 1974 முதல் 2007 வரை இவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் மற்றும் மோச மான நடவடிக்கைகள் தொடர் பாக பல்வேறு முறை சிறைசென்று வந்தவர் பிரிஜ்பூஷன் சிங் என்று மேலும் அந்த நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
In 2004, their elder son Shakti Sharan Singh committed suicide at the age of 23. Reportedly, he shot himself with a licensed pistol and blamed his father’s selfish attitude in a suicide note.
As per police records, 38 criminal cases were lodged against Brij Bhushan Singh between 1974 and 2007. In particular, the FIRs were filed under the stringent Gangsters and Goonda Acts for various charges including theft, dacoity, murder, criminal intimidation, attempt to murder, and kidnapping, though he was acquitted in most of the cases as per his election affidavit.
No comments:
Post a Comment