பெங்களூரு, ஜூன் 8 கருநாடகத் தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் சித்தராமையா கூறி யுள்ளார்.
முதலமைச்சர் சித்தராமை யாவை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப் பட்ட சமூகங்களின் மடாதிபதிகள், மடாதிபதி நிரஞ்சானந்தபுரி சுவாமி தலைமையில் நேற்று முன் தினம் (6.6.2023) பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது முதலமைச்சருக்கு மடாதிபதிகள் வாழ்த்து கூறினர். அவர்கள் மத்தி யில் சித்தராமையா பேசியதாவது:- கருநாடகத்தில் முந்தைய பா.ஜனதா அரசு தேர்தல் நேரத்தில் அவசரகதியில் இட ஒதுக்கீட்டை உயர்த்தியது. அதற்கான சட்டத்தை கொண்டு வந்தாலும், இதை அரசியல் சாசனத்தின் 9ஆ-வது அட்டவணையில் சேர்க்கவில்லை. இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு வரைவு அறிக்கையை அப்போது அரசு தேர்தல் அறிவிப்பு வெளியா வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் அனுப்பியது. இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் முந்தைய அரசு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சமூகங்களின் நம்பிக் கையை பெற்று உள் ஒதுக்கீடு வழங் குமாறு நான் ஆலோசனை கூறி னேன். ஆனால் இதை அரசு ஏற்க வில்லை. அதனால் பல சமூகங்கள் போராட்டங்களை நடத்தின. அர்ப்பணிப்பு உணர்வு இல்லாவிட் டால் இத்தகைய குழப்பங்கள் நடைபெறுவது சகஜம்.
பா.ஜனதா எப்போதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப் பாட்டை கொண்ட கட்சி. அரசியல் நோக்கத்திற்காக அக்கட்சியின் ஆட்சியில் இட ஒதுக்கீடு உயர்த்தப் பட்டது. இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும் சமூக நீதியில் சமரசம் செய்து கொள்ளாது. சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற் படுத்த வேண்டியுள்ளது. இந்த நோக்கத்தில் நான் முன்பு முதல மைச்சராக இருந்தபோது ரூ.162 கோடியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட் டது. அந்த அறிக்கையை முன்பு இருந்த அரசுகள் ஏற்கவில்லை. ஆனால் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த அறிக்கையை ஏற்கும்.
காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.59 ஆயிரம் கோடி செலவு செய்கிறது இவ்வாறு சித்தராமையா பேசினார்.
No comments:
Post a Comment