ஆர்.எஸ்.எஸில் பிறந்து வளர்ந்தவரே விளாசுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

ஆர்.எஸ்.எஸில் பிறந்து வளர்ந்தவரே விளாசுகிறார்

சுரபி ராமச்சந்திரன்

நூலின் பெயர் : நரக மாளிகை
ஆசிரியர் : சுதீஷ் மின்னி
பதிப்பகம் :  பரிசல்
விலை : ரூ.120/-

அய்ந்து  வயது முதல் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி பெற்று ரத்தம், சதை, புத்தி அனைத்திலும்  பிற மத வெறுப்பும் வெறியும் ஊறிய சிறுவனாக வளர்ந்தவர்  இந்நூலாசிரியர் சுதீஷ் மின்னி.

 25 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பின், அதன் கொடூர பாசிச செயல்பாடுகளால் மனம் வெதும்பி அதிலிருந்து வெளியேறுகிறார்.  அந்த அமைப்பின் உள் அந்தரங்கங்களையும், அதன் கட்டமைப்பையும், வேலைப் பாணியையும், கொடூரமான கேவலமான நடவடிக்கைகளையும் இந்நூலின் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறார். 

 பள்ளியில் ஆறாம் வகுப்பில் தன்னுடன் படித்த சக இஸ்லாமிய மாணவனை 'நீ பாகிஸ் தான் உளவாளி தானே?' என்று கேட்டவாறு  சாப்பாட்டுத் தட்டால் தலையில் அடித்த நிகழ்வை குற்ற உணர்வோடு நினைவு கூறு கிறார்.

இன்று இந்தியாவை ஆளுகின்ற பி.ஜே.பி. என்ற மிகப் பெரும் அரசியல் கட்சியின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். குறித்து இந்நூல் தரும் செய்திகள்:

"ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு பண்பாட்டு அமைப்பு என்று சொல்லிக் கொண்டு பாசிசத் தன்மையோடும், ராணுவ பாணியிலான ரகசியத் தன்மையோடும் செயல்படும் அமைப்பு. கோடிக் கணக்கான சொத்துக்களைக் கொண்டிருக்கக் கூடிய உலக அளவிலான வலைப்பின்னல் கொண்ட அமைப்பு.

பல்வேறு துணை அமைப்புகளையும், போலியான அல்லது தற்காலிக பெயர்களைக் கொண்ட உதிரிக் குழுக்களையும் கொண்டது இது. இவை 'சங்பரிவார்' என்று அழைக்கப் படுகின்றன. 

பெரும் தொழிலதிபர்கள், உயரதிகாரிகள், மடாதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், ஊடகவியலா ளர்கள், மேனாள் ராணுவத்தினர் இவ்வமைப்பு களில் ரகசிய அங்கத்தினர்களாகவும், ஆதரவா ளர்களாகவும், ஆலோசகர்களாகவும் இருக் கிறார்கள். நாக்பூர் தலைமை அலுவலகமான ஹெட்கேவார் பவனில் தொழிலதிபர் அதானி யோகா பயிற்சியில் ஈடுபட்டதை நேரில் பார்த் துள்ளதாக சுதீஷ் மின்னி இந்நூலில் குறிப்பிட் டுள்ளார்.  அதானிக்கு அடி விழுந்தால் ஆர்.எஸ்.எஸ். ஏன் அலறுகிறது என்று இப்போது  புரிகிறதா?  

ஷாகாக்கள் மூலம் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஊடுருவி சிவில் சமூகத்தின் சிந்தனையை ஆட்கொள்வது தான் இவர்களின் வேலை முறை.  குருஜி கோல்வால்கர் எழுதிய 'Bunch of Thoughts' (தமிழில் 'ஞானகங்கை') என்ற நூல் தான் இவர்களது வழிகாட்டி. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ் டுகள் மூவரும் உள்நாட்டு அபாயங்கள் என்றும், பிரதான எதிரிகள் என்றும் அடையாளப்படுத்தி, அவர்களுக்கெதிராக விஷக் கருத்துகளையும் வெறுப்பையும் விதைப்பது அவர்களது பாடத் திட்டம். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் கதைகள், திரிக்கும் வரலாறுகள், கற்றுக் கொடுக்கும் விளையாட்டுகள், கொண்டாடும் விழாக்கள் என  அனைத்துக்குள்ளும் இந்த விஷக் கருத்துக்கள் ஒளிந்திருக்கும். அதன் மூலம் ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவது தான் இவர்களின் இலக்கு. மொத்தத்தில் பிராமணிய மேலாதிக்கத்தையும் நலன்களையும் நிலை நாட்டுவதே அடிப்படை நோக்கம்.

கீழ்க்கண்ட துணை அமைப்புகளும் உதிரிக் குழுக்களும் இவர்களுக்காக இயங்குகின்றன.

பாலகோகுலம் : குழந்தைகள் மனதில் தேச பக்தி என்ற பெயரில் மதவெறி நஞ்சைக் கலக்க -

விஞ்ஞான் பாரத் / சுதேசி சயின்ஸ் மூவ் மெண்ட்: வேதக் கணிதம், யோகா, டியூசன் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ -

விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP): சாமியார்கள் அமைப்பு.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP): மாணவர் அமைப்பு. 

பஜ்ரங் தள் : ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர் படை. 

பாரதிய மஸ்தூர் சங் (BMS) : தொழிற்சங்கம்

வனவாசி கல்யாணஸ்ரம்: ஆதிவாசி மக்களைத் திரட்ட. 

சேவாபாரதி: மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என நடத்தி வெளிநாட்டு நிதி திரட்டுதல்.

இந்து விஸ்வ விபாக்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பு. அமெரிக்காவில் HSS என்ற பெயரில் இயங்குகிறது.

ஷேத்ர சம்ரக்ஷண சமிதி : கோவில்களை பாதுகாக்கும் அமைப்பு.

பாரதீய அபிபாஷக பரிஷத்: வழக்குரைஞர் பிரிவு

பாரதிய விச்சார கேந்திரம்: வரலாற்றாளர்கள் மற்றும் சிந்தனையாளர் பிரிவு

சாணக்யா : தத்துவப் பிரிவு

பாரதிய பாஷா பரிஷத்: சமஸ்கிருத மொழிக் கான பிரிவு

அகில பாரதிய மல்சிய பிரவர்த்தக சங்: மீனவர் பிரிவு

போன்சாலா ராணுவப் பள்ளி

இவை தவிர 'வித்யா பாரதி' என்னும் அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 12,364 பள்ளிகளும் 42 கல்லூரிகளும் 12,001 டியூஷன் சென்டர்களும் நடத்தப்படுகின்றன. 'சங்கல்ப்' என்ற பெயரில் IAS அய்.ஏ.எஸ். பயிற்சி நிறுவனமும் இயங்குகிறது. இங்கு தான் 'புகழ் பெற்ற' அண்ணாமலை 20,000 புத்தகங்கள் படித்ததாகக் கூறுகிறார்கள்.

இன்னும் ஹிந்து அய்க்கிய வேதி, சனாதன் சன்ஸ்தா, ஹிந்து யுவ வாகினி, அபினவ் பாரத், சிறீராம் சேனா, ஏகலவ்ய வித்யாலயா, விவே கானந்தா கேந்திரம், பதஞ்சலி யோகா பீடம் என ஏராளமான அமைப்புகளும், நிறுவனங்களும்  இயங்குகின்றன. ஜனம் என்ற தொலைக் காட்சியும்,  ஆர்கனைசர், ஜென்ம பூமி, கேசரி என பத்திரிக்கைகளும் பிரத்யேகமாக நடத்தப் படுகின்றன.

ஆண்டுதோறும் குருதட்சணை என்ற பெயரில் கோடிக்கணக்கான தொகை வசூலிக்கப் படுகிறது. குறைந்தபட்சம் கேரளாவிலிருந்து 250 கோடியும், அதிகபட்சம் குஜராத்திலிருந்து 1000 கோடியும் குருதட்சணை என்ற பெயரில் வரு மானம் வருகிறது. இவை எவற்றுக்கும் வருமான வரி கிடையாது."

இப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அனைத்தையும் போட்டு உடைத்து அதன் பாசிச முகத்தை  அம்பலப் படுத்துகிறார் சுதீஷ் மின்னி. குறுகிய காலத்தில் 17 பதிப்புகள் கண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற் பனையாகி உள்ளதன் மூலம் இந்நூலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

நூலின் பெயர் : நரக மாளிகை

ஆசிரியர் : சுதீஷ் மின்னி

பதிப்பகம் :  பரிசல்

விலை : ரூ.120/-


No comments:

Post a Comment